Actress Devayani: 'ரெஸ்ட்ரிக்ஷனே இல்ல.. கேரக்டராவே மாறிடணும்.. ' நடிகை தேவயானி சொல்லும் சீக்ரெட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Devayani: 'ரெஸ்ட்ரிக்ஷனே இல்ல.. கேரக்டராவே மாறிடணும்.. ' நடிகை தேவயானி சொல்லும் சீக்ரெட்

Actress Devayani: 'ரெஸ்ட்ரிக்ஷனே இல்ல.. கேரக்டராவே மாறிடணும்.. ' நடிகை தேவயானி சொல்லும் சீக்ரெட்

Malavica Natarajan HT Tamil
Feb 05, 2025 06:20 PM IST

Actress Devayani: நடிகை தேவையான தசாப்தங்கள் கடந்து சினிமாவில் நிலைத்து நிற்பதற்கான காரணங்களாக தான் நினைப்பவை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Actress Devayani: 'ரெஸ்ட்ரிக்ஷனே இல்ல.. கேரக்டராவே மாறிடணும்.. ' நடிகை தேவயானி சொல்லும் சீக்ரெட்
Actress Devayani: 'ரெஸ்ட்ரிக்ஷனே இல்ல.. கேரக்டராவே மாறிடணும்.. ' நடிகை தேவயானி சொல்லும் சீக்ரெட்

இந்நிலையில், தேவயானி சினிமாவில் தான் தற்போது நிலைத்து நிற்பதற்கும், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வருவதற்கும், அக்கா, அம்மா கேரக்டர்கள் கொடுக்கப்படுவது குறித்தும், வெற்றி தோல்விகளை கையாளும் விதம் குறித்தும் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

கேரக்டருக்கு எண்டே இல்ல

அந்தப் பேட்டியில், "சினிமாவுல ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு கெடைக்குற கேரக்டருக்கு எண்டே இல்ல. நடிக்குறதுக்கு நெறைய கேரக்டர் இருக்கு. நாம ஹீரோயினா நெறைய படம் பண்ணிட்டோம். இதுக்கு அப்புறம் அடுத்த கேரக்டருக்கு நாம நகர்ந்து போயிடனும். சில பேரு நடிக்குறாங்க. சில பேர் நடிக்காம போயிடுவாங்க. ஆனா நான் எனக்கு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் வைக்குறது இல்ல.

நான் கல்யாணம் ஆன அடுத்த நாள்ல இருந்தே நடிக்க போயிட்டேன். பெரிய படமும் பண்ணிருக்கேன். சின்ன சின்ன கேரக்டரும் பண்ணிருக்கேன்.

நமக்கு எல்லாம் பிளஸ்ஸிங்

என்ன பொருத்தவரைக்கும் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். எனக்காக யோசிச்சு யாரோ கதை எழுதிட்டு இருக்காங்க. அவங்களோட மைண்ட்ல நாம இருக்குறதால தான் அது நடக்குது. அது ஒரு பிளஸ்ஸிங். நாம இருக்க வரைக்கும் நடிக்கணும். படம் முழுக்க வந்தாலும் நம்ம கேரக்டர் தெரியாமலும் போகலாம். சின்ன கேரக்டர் வந்தாலும் நாம நல்லா பேசப்படலாம்.

நான், நான் தான்

சினிமா முற்றிலும் ஹீரோக்கள மையப்படுத்தி எடுக்கப்படுற விஷயம். சில லக்கி ஹீரோயின் இருக்காங்க. ஒரு காலத்துல நான் பெரிய ஹீரோயினா இருந்தேன். இப்போ இப்படி இருக்கேன்னு எல்லாம் யோசிட்டதே இல்ல. எப்போவும் நான் நான் தான். நான் தேவயானி தான். ஒரு படத்துல சின்ன கேரக்டர் நடிக்குறதால எதுவும் மாறாது. எனக்கு தெரியும் நான் யாருன்னு. உண்மையா வேலை செஞ்சா நல்லா வரும்.

அங்கீகாரம் பெருசு

சினிமாவுல நமக்கு கிடைக்குற அங்கிகாரம் ரொம்ப பெருசு. அது ஆர்ட்டிஸ்ட்டுக்கு டானிக் மாதிரி. நான் ஆக்டிங் கிளாஸ் போகல. டான்ஸ் கிளாஸ் போகல. எனக்கு எதுவும் தெரியாது. ஒரு கேரக்டர் நமக்கு கொடுத்தா அந்த கேரக்டராவே நாம மாறிடனும். வாழ்க்கையில தோல்விய பாக்காத ஆளுங்களே இல்ல. எல்லாருக்கும் எல்லாமே வேணும். யாராவது எதாவது அட்வைஸ் பண்ணா அத நாம ஏத்துக்கணும். அப்போ தான் நாம முன்னேற முடியும்" எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.