தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Devayani Rajakumaran Latest Interview About Her Love Story

Devayani Rajakumaran: ‘அழகை பார்க்கா காதல்.. செட்டில் ஈர்த்த ராஜகுமாரன்.. வலையில் விழுந்த தேவயாணி! - காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 14, 2024 06:00 AM IST

அவரால் செய்யக்கூடிய ரோல்களை யாரும் அவருக்காக தயார் செய்யவில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே பிரதிபலிக்கக்கூடிய கேரக்டர்கள் தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் வேலை பார்ப்பார்.

தேவயாணி காதல் கதை!
தேவயாணி காதல் கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “அவர் இயக்குநராக பணியாற்றும் பொழுது, அவருடைய குணம், அவர் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்டவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது

அங்குதான் என்னுடைய காதல் ஆரம்பமானது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், மனிதர்களை அழகாக கையாளுவார். நன்றாக டைரக்ட் செய்வார்.  ஒரு கணவராக அவர் எனக்கு மிகவும் உறுதுணையாகவும், அன்பை கொடுப்பவராகவும் இருக்கிறார். அவர் என்னுடனே நான் செய்யும் முயற்சிகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கிறார். அவர் இல்லையென்றால் எனக்கு ரொம்ப கஷ்டம் தான்.” என்றார்

இதையடுத்து பேசிய ராஜாகுமாரன், “தேவயாணி மேடத்தை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். அவரை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அவரை ஒரு ஆர்டிஸ்ட் ஆக அவர் இவ்வளவுதான் என்று யாராலும் எடை போட்டு விட முடியாது. 

அவரால் செய்யக்கூடிய ரோல்களை யாரும் அவருக்காக தயார் செய்யவில்லை.  அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே பிரதிபலிக்கக்கூடிய கேரக்டர்கள் தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பார். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் வேலை பார்ப்பார்.

உண்மையில் நான் இவரை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று எதுவுமே ஸ்பெஷலாக செய்ததில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் செய்யக்கூடிய இயல்பான செயல்கள்தான், அவரை இம்ப்ரஸ் செய்ய வேண்டுமே தவிர, அதற்காக ஒன்றை செட் அப் செய்து இம்ப்ரஸ் செய்வது என்பது சரியானதாக இருக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் உண்மைதான் அவரை இம்ப்ரஸ் செய்ய வேண்டும்.” என்று பேசினார் 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.