90ஸ்-களின் கனவு கன்னி.. ரகசிய திருமணம்.. படம்- சீரியல் இரண்டிலும் கொடிக்கட்டி பறந்தவர்.. நடிகை தேவயானி பிறந்தநாள் இன்று!
HBD Devayani : நடிகை தேவயானி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 90ஸ் களின் கனவு கன்னி என்றே சொல்லலாம். தேவயானி என இயற்பெயர் கொண்ட இவரின் உண்மையான பெயர், சுஷ்மா ஜெயதேவ். கர்நாடகா குடும்பத்தை சேர்ந்த இவர், மங்களூரில் பிறந்தார். இவரின் தாய் மலையாளி.
வீட்டிற்கு முத்த மகளான இவர், குடும்பத்தில் ஒழுக்கமாக வளர்ந்து இருக்கிறார். இவர் குடும்பத்துடன் மும்பைக்கு சென்றதால் படித்தது, வளர்ந்தது என அனைத்துமே மும்பையில் தான். இவருக்கு இரண்டு தம்பிகள். அதில் ஒருவர் தான் நகுல்.
பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்த காரணத்தினால் நிறைய அடிஷன்கள் சென்று இருக்கிறார். இறுதியாக அவருக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் மலையாளத்திற்கு சென்றுவிட்டார்.
தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகம்
எந்த ஒரு ஆடிஷனும் இல்லாமல் இவரை பார்த்தவுடன் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் பிரியதர்ஷன் அவரின் வீட்டிற்கே சென்று பேசி உள்ளார். கின்னரிபுழையோரம் படம் தான் அவரின் முதல் மலையாள படம்.
தமிழில் கே.எஸ் அதியமான் இயக்கத்தில் தொட்டாச்சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவயானி. ரேவதியின் தங்கையாக அவர் நடித்து இருந்தார்.
தற்போதும் தேவையானி பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை தேவயானி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேவயானி காதல் கதை
சூர்யவம்சம் படத்தில், விக்ரமனிடம் உதவி இயக்குநாரகப் பணிபுரிந்த ராஜகுமாரனுக்கு, தேவயானியிடம் வசனம் சொல்லித்தரும் வேளை இருந்ததாம். அப்போது எந்தவொரு பாசாங்கும் இல்லாமல், மிக இயல்பாக தேவயானிக்கு தமிழ் உச்சரிப்பு, நடிப்பு, வசனம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்திருக்கார், ராஜகுமாரன். அப்போது, தாங்கள் முதல் படம் செய்யும்போது, தான் கதை கேட்காமல் நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார், தேவயானி. அந்தளவுக்கு ராஜகுமாரன் தேவயானிக்கு ஒரு நம்பிக்கையான ஆளாக மாறியிருந்தார்.
அதேபோல, தான் முதலில் இயக்கும் நீ வருவாய் என என்னும் படத்திற்கு, புரொடியூசரை பிடித்துவிட்டு, தேவயானியைப் பார்க்கப்போயிருக்கிறார், ராஜகுமாரன். அவரைப் பார்த்ததும் படம் ஓகே ஆகிவிட்டதுதானே என குழந்தைப் போல் சந்தோஷப்பட்டு சிரித்தாராம், தேவயானி. அதன்பின், நீ வருவாய் என படத்தில் தேவயானி நடித்தும், படமும் பெரிய ஹிட் ஆனது. அப்போதே, ராஜகுமாரன் மீது மிகப்பெரிய பாசம் வந்திருக்கிறது, தேவயானிக்கு.
சேலையினை பரிசளித்த ராஜகுமாரன்
இதற்கிடையே தேவயானிக்கு ஒரு சேலையினை யதார்த்தமாக வாங்கிக்கொடுத்துள்ளார்,ராஜகுமாரன். இந்நிலையில் ராஜகுமாரன் மீது இருக்கும் காதல் காரணமாக, அவர் வாங்கித்தந்த சேலையினை அணிந்துகொண்டு, நம்மைப் பற்றி பலரும் பலவாறு கிசுகிசுக்கின்றனர் எனக்கூறியுள்ளார். ஆனால், ராஜகுமாரன் அதை கண்டுகொள்ளவில்லையாம். பின் வெளிப்படையாக தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்பின் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது.
பிறகு, தன் காதலை தனது குடும்பத்தினரிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டார், தேவயானி. ஆனால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது. வீட்டைவிட்டு வெளியேறிய தேவயானி, ராஜகுமாரனை திருத்தணியில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என இருபெண் குழந்தைகள் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்