'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி

'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி

Malavica Natarajan HT Tamil
Published May 13, 2025 10:33 AM IST

நான் படமே பண்ண மாட்டேன்னு சொன்னேன். ஆனா என்ன கம்பெல் பண்ணி நடிக்க வச்சு, அந்த படத்துல அழகான பாட்டையும் கொடுத்தாங்க என நடிகை தேவையானி தான் நடித்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி
'நான் அந்த படம் பண்ணவே மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவ்ளோ அழகான பாட்ட கொடுத்தாங்க' நடிகை தேவையானி

படத்தில் நடிக்க தயங்கினேன்

அப்போது, நியூ படத்தை நான் முதலில் தெலுங்கில் தான் நடித்தேன். மகேஷ் பாபு தான் எஸ்.ஜே.சூர்யா சாரின் ரோலில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் என்னை நடிக்க வைக்க என் கால்ஷீட் கேட்டு வந்தாங்க. ஆனா நான் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த டைம்ல நான் நிறைய படத்துல ஹீரோயினா பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயத்துல நான் ஹீரோவுக்கு அம்மாவ பண்ணனும்ன்னா அது எப்படி இருக்கும்ன்னு தெரியல என்றார்.

கட்டாயப்படுத்தி நடிக்க வச்சாரு

தொடர்ந்து பேசிய தேவையானி எஸ்.ஜே. சூர்யா தன்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததாக கூறினார். " நான் அம்மாவா நடிக்க மறுத்தும் கூட எஸ்.ஜே. சூர்யா என்னை கூப்பிட்டு, நான் உங்களுக்கு கதை சொல்றேன். அதை முதலில் கேட்டுட்டு இந்த கதைய பண்ணுங்கன்னு என்னை கட்டாயப்படுத்தினாரு. 10 நிமிஷத்துக்குள்ள வீட்டுக்கே வந்து கதைய சொன்னாரு. அப்புறம் அவரால தான் அந்த படம் பண்றேன்னு சொன்னேன். தெலுங்குல பண்ணுனத பாத்து, தமிழ்லயும் நீங்க தான் பண்ணனும்ன்னு அடம்பிடிச்சாரு. நான் இதெல்லாம் போதும் தமிழ்ல இந்தப் படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னேன். ஆனா அதுக்கு அப்புறம் நான் தான் தமிழ்ல படம் பண்ணேன்.

ஹீரோயினுக்கும் அம்மாக்கும் ஒரே வயசு

இந்தப் படத்தோட அழகே என்னென்னா எனக்கும் சிம்ரனுக்கும் ஒரே வயசு தான் இருக்கும். அதாவது ஹீரோயினும் பையனோட அம்மாவும் ஒரே வயசுல இருக்கோம். அந்தப் படத்துல அவ்ளோ அழகான பாட்ட எனக்கு கொடுத்தாரு. அந்த பாட்டு எனக்கு ஒரு ஆந்தம் மாதிரி மாறிடுச்சு. அந்தப் பாட்ட ரொம்ப அழகானது என காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா என்ற பாட்டை நினைவுகூர்ந்தார்.

நியூ படம்

"நியூ" திரைப்படம் 2004 ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த தமிழ் அறிவியல் புனைகதையுடன் கூடிய காதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். தேவயானி எஸ்.ஜே. சூர்யாவின் அம்மாவாக நடித்திருந்தார்.

நியூ படத்தின் கதை

ஒரு விஞ்ஞானி ஒரு வினோதமான பரிசோதனையின் மூலம் ஒரு சிறுவனை (எஸ்.ஜே. சூர்யா) 22 வயது இளைஞனாக மாற்றுகிறார். அந்த இளைஞன் தனது புதிய வாழ்க்கையையும், தான் விரும்பும் பெண்ணையும் (சிம்ரன்) அடைவதற்கான போராட்டம் தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல், சிறுவன் மற்றும் இளைஞனாக இரு கதாப்பாத்திர கதையாக நடித்திருப்பார். அவரது வித்தியாசமான நடிப்பு மற்றும் இயக்க பாணி இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சர்ச்சையும் வெற்றியும்

ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் ஒவ்வொரு பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றன. இருப்பினும், படத்தில் வரும் சில காட்சிகளும் பாடல்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் , இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என்றும் சில அமைப்பினர் போராட்டம் செய்தனர். இருப்பினும், "நியூ" திரைப்படம் அதன் வித்தியாசமான கதைக்களம் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பிற்காக பரவலாக பேசப்பட்டது. வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது.