10,000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. பாலிவுட் 'கான்'களே அஞ்சும் வளர்ச்சி.. இந்தியாவின் டாப் ஹீரோயின் இவர்தான்!
இதுவரை தான் நடித்த படங்களின் மூலம் 10,000 கோடி பாக்ஸ் ஆபிஸை பெற்ற ஒரே நடிகையாக உருவெடுத்து, பாலிவுட்டில் கான்'களால் செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
தீபிகா படுகோனுக்கு உள்ள ரசிகர் கூட்டம் இப்போது இந்தியாவில் வேறு எந்த நடிகைக்கும் இல்லை என்றால் அது மிகையாகாது. பாலிவுட்டின் மூன்று கான் நாயகர்களான ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோர் தங்கள் திரை வாழ்க்கையில் வசூலித்த மொத்த தொகையை விட தீபிகா நடித்த படங்களின் மொத்த வசூல் அதிகம் என்று சொன்னால் நம்புவீர்களா?
10 ஆயிரம் கோடி வசூல்
தீபிகா படுகோன் 18 ஆண்டு திரை வாழ்க்கையில் மொத்தமாக ரூ.10,000 கோடிக்கு மேல் வசூலித்த ஒரே நடிகையாக உள்ளார். அதுமட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் தீபிகாதான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் அறிமுகம்
2007 ஆம் ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தீபிகா. இந்த 18 ஆண்டுகளில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் சேர்த்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 10,200 கோடி வசூலித்துள்ளன. அதில் ரூ. 8,000 கோடி இந்தியப் படங்கள் மூலம் வந்தது, மீதமுள்ள ரூ. 2,200 கோடி அவர் நடித்த ஒரே ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage மூலம் வந்தது.
வெற்றிக்கு காரணமான படங்கள்
தீபிகா படுகோன் தனது திரை வாழ்க்கையில் பெரிய பெரிய நாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். குறிப்பாக 2023 ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து நடித்த பதான், கடந்த ஆண்டு பிரபாஸுடன் இணைந்து நடித்த கல்கி 2898 AD ஆகிய இரண்டு படங்களும் ரூ.1,000 கோடி வசூலை எட்டின. இவை தீபிகாவின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை முதல் 5 இடங்களில் கூட இல்லாத அவர், இந்த இரண்டு படங்களின் வெற்றியால் முதல் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் முன்னணி நடிகை
இந்த இரண்டு படங்களுடன், தீபிகா இந்த இரண்டு ஆண்டுகளில் நடித்த ஃபைட்டர், சிங்கம் அகெய்ன் ஆகிய படங்களும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தன. மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் அவரது படங்கள் ரூ.4,000 கோடிக்கு மேல் வசூலித்தன. இதனால் நாட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
அவருக்கு அடுத்தபடியாக ரூ.6,000 கோடியுடன் பிரியங்கா சோப்ரா, ரூ.5,500 கோடியுடன் கத்ரீனா கைஃப் உள்ளனர். நாயகர்களைப் பொறுத்தவரை, ஷாருக்கான் ரூ.9,000 கோடியுடன் முதல் இடத்தில் உள்ளார், அக்ஷய் குமார் ரூ.8,300 கோடி, சல்மான் கான் ரூ.7,500 கோடி, ஆமிர் கான் ரூ.7,200 கோடியுடன் உள்ளனர். தீபிகா வரும் காலங்களில் கல்கி 2, பிரம்மாஸ்திரா 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளதால், அவரது வளர்ச்சி மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சும் பாலிவுட்
சினிமாவில் வெற்றி என்பது பாக்ஸ் ஆபிஸ் வருவாயைப் பொறுத்து அளவிடப்படுகிறது. நடிகர்களின் மதிப்பு அவர்களின் படங்கள் வெளியானதும் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அந்த அளவுகோலின்படி, கான்கள் பாலிவுட்டின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான நட்சத்திரங்கள். அவர்களையே தனது படங்களின் வசூலில் முறியடித்து பாலிவுட்டே அஞ்சும் அளவு வளர்ச்சி பெற்றுள்ளார் தீபிகா படுகோன்.
இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில படங்களில் நடித்து அனைத்து மொழிகளிலும் தன் திறமையை நிரூபித்து வருகிறார்.
டாபிக்ஸ்