Darsha Gupta: விஜய் அழைத்தால் உடனே கட்சியின் இணைந்துவிடுவேன்.. கமல், விஜய் சேதுபதிக்கு உள்ள வித்தியாசம் - தர்ஷா ஷேரிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Darsha Gupta: விஜய் அழைத்தால் உடனே கட்சியின் இணைந்துவிடுவேன்.. கமல், விஜய் சேதுபதிக்கு உள்ள வித்தியாசம் - தர்ஷா ஷேரிங்ஸ்

Darsha Gupta: விஜய் அழைத்தால் உடனே கட்சியின் இணைந்துவிடுவேன்.. கமல், விஜய் சேதுபதிக்கு உள்ள வித்தியாசம் - தர்ஷா ஷேரிங்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2025 02:03 PM IST

Actress Darsha Gupta: தூத்துக்குடி பகுதியில் ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை தர்ஷா குப்தா, விஜய் சேதுபதிக்கும், கமலுக்கும் என்ன வித்தியாசம், விஜய்யின் தவெக கட்சியின் இணைந்து பணியாற்ற தயார் போன்ற பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.

விஜய் அழைத்தால் உடனே கட்சியின் இணைந்துவிடுவேன் - தர்ஷா பேச்சு
விஜய் அழைத்தால் உடனே கட்சியின் இணைந்துவிடுவேன் - தர்ஷா பேச்சு

இதையடுத்து தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நடிகை தர்ஷா குப்தா தரிசனம் செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, "பிக் பாஸ் நிகழ்ச்சி, தனது புதிய படங்கள் பற்றி பேசியதோடு, விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து பணியாற்ற தயார்" என கூறியுள்ளார்

இதுதொடர்பாக நடிகை தர்ஷா குப்தா கூறியதாவது, "தூத்துக்குடியில் உள்ள பிரத்யங்கரா கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு, பிரத்யங்கரா தேவி சிறப்பு பூஜையில் கலந்துகொண்டேன். பிக் பாஸ் போறதுக்கு முன்னாடியே நிறைய திருச்செந்தூர், கேரளான்னு ஆன்மிக பயணம் செய்திருக்கேன். இப்போ மறுபடியும் தொடர்ந்துள்ளேன்.

அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும்

இந்த கோயிலில் தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நடப்பதாக கூறினார்கள். அதனால் தூத்துக்குடிக்கு வந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டேன். இங்கு ரசிகர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். நான் மேன்மேலும் உயர்ந்து அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.

ஹீரோயின் செண்ட்ரிக் கதைகளில் நடிக்க ஆசை

இந்த மாதம் இறுதியில் தெலுங்கில் நான் நடிக்க இருக்கும் படத்தின் பணிகள் தொடங்குகிறது. தமிழில் நடிப்பதற்கு கதைகள் கேட்டுக்கொண்டு வருகிறேன். எனக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையில் விருப்பம். அதற்கு ஏற்ற கதைக்காக காத்திருக்கிறேன். எனக்கு கமல்ஹாசன் மிகவும் பிடிக்கும். பீட்சா படம் முதல் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையாக உள்ளேன். அவரை பார்த்ததே எனக்கு மகிழ்ச்சி.

கமலுக்கு, விஜய் சேதுபதிக்கும் உள்ள வித்தியாசம்்

கமலுக்கும், இவருக்கு இருக்கும் வித்தியாசம் என்னன்னா, விஜய் சேதுபதி ரொம்ப ஜாலியா, எதார்த்தமா பண்ண மாதிரி இருந்துச்சு. மக்களுக்கு எண்டர்டெயின்மெண்டா இருந்துச்சு. கமல் நிறையா புத்தகங்கள் படித்து நிகழ்ச்சிய பண்ண மாதிரி இருந்துச்சு.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது மறக்க முடியாத சம்பவம். எனக்கு பிடிக்கல. ஏனென்றால் அங்கு ரொம்ப ஜாலிய சாப்பிட்டுட்டு, நிம்மதிய தூங்கிட்டு, டாஸ்க் பண்ணிட்டு ஸ்டெரஸ் இல்லாமல் இருந்தேன். நிறைய பேரு பிக் பாஸ் வீட்டுகுள்ள தான் ஸ்டெரஸ் இருப்பதா சொன்னாங்க. ஆனா எனக்கு அப்படி இல்லை.

விஜய்யின் அழைத்தால் கட்சியின் இணைவேன்

தளபதி விஜய் சும்மா போய் நின்னாலே பார்க்க நிறையா பேர் இருக்காங்க. அவரு அடுத்த சிஎம் ஆவாருன்னு எதிர்பார்ப்போட காத்திட்டு இருக்கேன். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே ஹீரோவா அவர் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தார். அவர் அரசியல் வந்த பிறகு என்ன புதுசா செய்ய போகிறார் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. என்னயை கட்சியில் சேருமாறு கூப்பிட்டால் கண்டிப்பாக கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன். பதிவியும் கிடைத்தால் நல்லது" என்றார்.

முன்னதாக, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், 1 லட்சத்து 8 எலுமிச்சை யாகம் பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் தர்ஷா குப்தா பங்கேற்றார்

தர்ஷா குப்தா படங்கள்

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வந்த தர்ஷா குப்தா, ஜீடிவியில் ஒளிபர்ப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலம் நடிகையானார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியலில் பிரபலமானார். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்த இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தார்.

இதன்பினனர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தனராக பங்கேற்றுள்ளார். 2021இல் வெளியான ருத்ர தாண்டவம் படம் மூலம் சினிமாவில் நடித்த தர்ஷா குப்தா, பின் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்தார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.