‘ஆண் விபச்சாரிகளால் அனைத்தையும் இழந்தேன்.. அப்பா பென்ஷன் காப்பாத்துது’ -ஷர்மிளா!
Actress Charmila: ‘அவன் கரம் வைத்து ஏமாற்றினான். என் புகழை தான் அவன் மணந்தான். அதை வைத்து அவன் புகழ் பெற்று, என்னை உதறினான்’-ஷர்மிளா

தமிழ், மலையாளம் என போட்டி போட்டு நடித்து வந்த ஷர்மிளா, இப்போது வருமானம் இன்றி, தவித்துக்கொண்டிருக்கிறார். இவன் வேற மாதிரி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவரின் இந்த நிலைக்கு காரணம் என்ன? கலாட்டா பிங்க் இணையத்தில் அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘இப்போ நான், என் அப்பாவோட பென்ஷனில் தான் ஓட்டிட்டு இருக்கேன். இவன் வேற மாதிரி எனக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் , நீதிமன்றம், வழக்குனு போய்டு இருந்தேன். அப்போது இருந்த மன குழப்பத்தில், இவங்க ஷூட்டிங் வருவாங்களா? நடிப்பாங்களா? என்கிற குழப்பத்தில் எனக்கு யாரும் வாய்ப்பு தரவில்லை.
கிளாமரா நடிச்சா, எப்போதும் எவர் கிரீனா இருக்கலாம். எனக்கு அது பண்ண விருப்பமில்லை. அட்ஜஸ்ட் பண்ண விருப்பமே இல்லை. அதற்கு காரணம், நான் பெரிய சிபாரிசில் உள்ளே வந்தவள். அதனால், எனக்கு அந்த தொல்லை இருக்காது. அப்பா இறந்த பிறகு தான், அட்ஜஸ்ட்மென்ட் பத்தியே எனக்கு தெரியவந்தது.
‘எனக்கு கேரவேன் வேண்டாம், எனக்கு சூப்பரான உணவு வேண்டாம், ஒரு புது முகத்துக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்களோ, அதை விட கொஞ்சம் அதிகமா கொடுங்க’ என்று தான், நான் கேட்பேன். தெரு விலைக்கு யானை கிடைத்தால் யார் விடுவாங்க?
இப்போ நான் இறங்கு முகத்தில் இருக்கிறேன், இப்படியேவா போய்விடும், திரும்ப வரமாட்டேனா? வருவேன். எனக்கு வருமானம் பத்தவில்லை, படங்கள் இல்லை, இதனால் வெளியில் போய் செலவு செய்ய மனமில்லாமல், வீட்டிலேயே இருக்கிறேன்.
என் வீட்டில் என் அப்பா என்னை ஒழுங்க வளர்க்கவில்லை, ‘நீ சம்பாதிப்பதை நீயே வைத்துக் கொள்’ என கூறிவிட்டார். என் கையில் அவ்வளவு பணம் இருந்தது. இதை பார்த்த பலர் ஆண்கள், என்னுடன் பழகி என் பணத்தை செலவு செய்துவிட்டனர். பொதுவாக எல்லா பெண்களும், ‘அட்ஜஸ்ட்மென்ட்’ போய், அவங்க சம்பாதிப்பாங்க, ஆனால், என்னை பலர் காதல் காதல் என்று சொல்லி அட்ஜஸ்ட் செய்து, என்னிடம் இருந்ததை சம்பாதித்து விட்டு சென்றுவிட்டார்கள்.
‘நானே எல்லாம் பாத்துக்கிறேன், நீ உன் காசை செலவு பண்ணிக்கோ’ என்று என் அப்பா கூறியது தான் அதற்கு காரணம். நடுரோட்டில் பிச்சையெடுத்தாலும் எடுப்பேனே தவிர, என்னிடம் பணத்தை அபகரித்தவர்களிடம் நான் பணம் கேட்க மாட்டேன். அவர்கள் எல்லாம், ஆண் விபச்சாரிகள். இவனுங்ககிட்ட 10 பைசா கூட வாங்க மாட்டேன், அதை விட பெரிய கேவலம் எதுவும் கிடையாது.
கடைசி வரை நான் பார்க்க கூடாது என்று நினைத்தால், என் முதல் கணவர் கிஷோர் சத்யாவை தான் சொல்வேன். அவன் கரம் வைத்து ஏமாற்றினான். என் புகழை தான் அவன் மணந்தான். அதை வைத்து அவன் புகழ் பெற்று, என்னை உதறினான்,’’
என்று அந்த பேட்டியில் ஷர்மிளா கூறியுள்ளார்.

டாபிக்ஸ்