Bindhu Ghosh: ‘எல்லோரையும் சிரிக்க வைச்சேன்.. இப்போது எல்லோரும் என்னை அழ வைக்கிறாங்க’: நடிகை பிந்துகோஷ் உருக்கமான பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bindhu Ghosh: ‘எல்லோரையும் சிரிக்க வைச்சேன்.. இப்போது எல்லோரும் என்னை அழ வைக்கிறாங்க’: நடிகை பிந்துகோஷ் உருக்கமான பேட்டி

Bindhu Ghosh: ‘எல்லோரையும் சிரிக்க வைச்சேன்.. இப்போது எல்லோரும் என்னை அழ வைக்கிறாங்க’: நடிகை பிந்துகோஷ் உருக்கமான பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 27, 2025 06:54 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 27, 2025 06:54 AM IST

Bindhu Ghosh: நடிகை பிந்துகோஷ் 80களில் முக்கியமான காமெடி நடிகையாகத் திகழ்ந்தவர். அவரது எடை அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. தற்போது உடல் நலிவுற்று இருக்கும் அவர் அளித்த பேட்டி கீழே தரப்பட்டுள்ளது.

Bindhu Ghosh: ‘எல்லோரையும் சிரிக்க வைச்சேன்.. இப்போது எல்லோரும் என்னை அழ வைக்கிறாங்க’: நடிகை பிந்துகோஷ் உருக்கமான பேட்டி
Bindhu Ghosh: ‘எல்லோரையும் சிரிக்க வைச்சேன்.. இப்போது எல்லோரும் என்னை அழ வைக்கிறாங்க’: நடிகை பிந்துகோஷ் உருக்கமான பேட்டி

அத்தகைய காமெடி நடிகை பிந்துகோஷ் தற்போது உடல் நலிவுற்று இருக்கிறார். அவரிடம் கலாட்டா பிங்க் யூடியூப் சேனல் பேட்டி எடுத்திருக்கிறது. அதன் தொகுப்பு..

 

சினிமாவில் எவ்வளவு பேரை மகிழ வைச்சிருக்கீங்க அம்மா?

ஆமா. நிறைய பேர். எல்லா ஆர்டிஸ்ட்கூடயேயும் ஆடி இருக்கேன். ஒரு ஆர்டிஸ்ட் இல்லை. மொத்த பேரும் ஆடி இருக்காங்க. அவங்க எல்லோரும் சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க.

சினிமாவில் எத்தனை வருடங்கள் இருந்திருப்பீங்க?

70 வருஷம் இருந்திருப்பேன்.

உங்களுக்கு இப்ப என்ன வயசு ஆகுது?

76 வயசு ஆகுது.

உங்கள் உடம்புக்கு என்ன ஆச்சு?

உடம்புக்குத் தான் பிரச்னை, கால் பிரச்னை, வயிறு பிரச்னை, கிட்னி மற்றும் லீவர் பிரச்னை, அடுத்து கால் பிரச்னை இப்படி எல்லாமே.

உடம்புக்கு முதலில் காலில் தான் பிரச்னை ஆரம்பிச்சதா? இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணேன். ரெண்டு பிளாஸ்டிக் சர்ஜரி.

எதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி?

வயிறு பெருசாகிப் போச்சு. அதுக்கு பண்ணேன். திரும்பவும் வந்து கர்ப்பப்பை ஆபரேஷன் பண்ணேன். திரும்பவும் குட்டி ஆபரேஷன் பண்ணேன்.

முதலில் பண்ணின ஆபரேஷன் சொந்த வீட்டில் இருக்கும்போது பண்ணினேன். வயிறு சதையை குறைக்கிறதுக்காகப் பண்ணினேன். அப்போது, தூங்காத தம்பி தூங்காதே பட சூட்டிங் நடக்குது. திரும்பவும் ஆபரேஷன் பண்ணினேன். அதில் 13 கிலோ சதையை எடுத்தேன்.

அந்த ஆபரேஷன் பண்ணிருக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களா?

வேறு வழி. இப்படி ரெண்டு லட்சம், மூணு லட்சம் ஆபரேஷனுக்கு போயிடுச்சு. அப்போது சொந்த வீடு சென்னை தசரதபுரத்தில் இருந்தது. அடுத்து எல்லாம் வித்து, ஆபரேஷனுக்கு பணம் கொடுத்தேன்.

கிட்டத்தட்ட ஒரு 45 வயசு வரைக்குமே படம் நடிச்சிருப்பீங்களா? அவ்வளவு வருஷம் சம்பாரிச்சது எல்லாமே என்ன ஆச்சு?

எல்லாம் இப்படித்தான் மருத்துவ செலவுகளுக்கு போயிடுச்சு.

உங்களுக்கு எத்தனை பசங்க?

இரண்டு பசங்க.

இப்ப யாரு உங்களை பார்த்துக்கிறா?

சின்னவன் பார்த்துக்கிறான்.

பெரிய பையன் என்ன ஆனது?

அவன் போயிட்டான் ஹைதராபாத்துக்கு. அவன் தான் நம்மளை வேண்டாம்ன்னு சொல்றானே.

முதலில் பிளாட்டில் இருந்தீங்களா? இல்ல தனி வீட்டில் இருந்தீங்களா?

தனி வீட்டில் இருந்தேன். ஒன்றரை கிரவுண்ட். என்ன பண்றது நம்ம வீட்டில் இப்போது ஏசி கூட ரிப்பேர். இருக்கிற வரைக்கும் நிம்மதியாக இருந்துக்கணும்.

நடிகர்கள் சங்கத்தில் உங்களுக்கு உதவி எதுவும் வரலையா?

அதான் சொன்னேன்ல அறக்கட்டளை ஒன்றில் இருந்து தான் வரும். வேற எதுவும் வராது.

இத்தனை ஆபரேஷன் பண்ணி இவ்வளவு பண்ணா உடம்பு எப்படி இருக்கும். நான்கு ஆபரேஷன் பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு மருந்துகளும் வாங்க மாதத்துக்கு ஒரு பத்து ஆயிரம் ஆகும். வாடகை ஒரு 10ஆயிரம் ஆகும்.

நீங்கள் சம்பாரித்த பணத்தை, உங்கள் கணவரோடு சேர்ந்து சேர்த்து வைச்சுக்கலையா?

அவர் குடிகாரர். குடிச்சு குடிச்சு செலவு பண்ணிட்டார்.

எவ்வளவு கிலோ எடை குறைஞ்சிருப்பீங்க?

116 கிலோவில் இருந்து 43 கிலோவாக எடை குறைஞ்சிருக்கேன். ஒரு பெட்டில் படுத்தால் பூச்சி மாதிரி படுத்திருப்பேன்.

கமல்ஹாசனிடம் உதவிகேட்டு போன் பண்ணுனேன். அவர் பதில் சொல்லல. அடுத்து பிரபு, சத்யராஜ் என யாரும் பதில் சொல்லல. இப்போது சின்ன பையன் வருமானத்தில் இருந்து பார்த்துக்கிறான்.

இந்த நிலைமைக்கு காரணம் தலையெழுத்து தான். படத்தில் எல்லோரையும் சிரிக்க வைச்சேன். இப்போது எல்லோரும் என்னை அழ வைக்கிறாங்க’’ என முடித்தார், நடிகை பிந்துகோஷ்.

நன்றி: கலாட்டா பிங்க் யூட்யூப் சேனல்