தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Bigg Boss Vichithra Latest Interview About Kamal Haasan Bigg Boss Contestant Pradeep Antony

Bigg Boss Vichithra: ‘வார்த்தையில கவனம் வேணும்.. அவன் மட்டும் உள்ள இருந்திருந்தான்’ - விசித்ரா பளார் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 12, 2024 05:30 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பும் விசித்திராவும் வரக்கூடிய ஒரு எபிசோடு இருக்கிறது. அந்த எபிசோடில் பிரதீப்பும் விசித்திராவும் மிகவும் சீக்கிரமாக எழுந்து விடுவார்கள். பிற போட்டியாளர்கள் நாய் குரைத்த பின்னரே எழுவார்கள்.

பிக்பாஸ் விசித்ரா!
பிக்பாஸ் விசித்ரா!

ட்ரெண்டிங் செய்திகள்

விசித்ரா பேசும் போது, “ பிரதீப்பிடம் மிகவும் நல்ல மனது. எதையும் அவன் வெளிப்படையாக சொல்லிவிடுவான். அவனுக்கு நிறைய திறமைகள், நிறைய கனவுகள் இருக்கின்றன. 

இன்றைய சமூகத்தில் நாம் நம்மை எப்படி வெளிக்காட்டிக் கொள்கிறோம் என்பது மிக மிக முக்கியமானது. அது நம்முடைய உடல் மொழி, நாம் எப்படி மற்றவர்களிடம் பேசுகிறோம், குறிப்பாக பெண்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறோம் உள்ளிட்டவை அடங்கும். 

அதை பிரதீப் நிச்சயமாக தன்னுடைய மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.  வாழ்க்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது எண்ணி வருத்தப்படாமல், அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வரக்கூடிய காலங்களில் இது போன்றதொரு சூழ்நிலையானது எங்கேயும் வராமல் அவன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது நாம் சொல்ல வரக்கூடிய விஷயங்கள் சரியாக இருந்தாலும், நாம் அதனை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் மிகவும் தேர்ந்தவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் சொல்ல வரக்கூடிய அந்த விஷயமானது, மக்களிடம் நேர்த்தியாகச் சென்றடையும். ஆனால் நீங்கள் அதிலிருந்து விலகும் பொழுது, நாம் சொல்லக்கூடிய விஷயத்தை யாருமே கவனிக்க மாட்டார்கள்

அவர்களுக்கு தவறாக பேசக்கூடிய வார்த்தைகளின் மீது கவனம் செல்லும். அதனால் தான் அங்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. ஆகையால் பிரதீப் வார்த்தைகளில் மட்டும் கொஞ்சம் கவனத்தை வைத்தான் என்றால் அவன் எங்கேயோ சென்று விடுவான்.” என்று பேசினார். 

கணவர் பேசும் போது, “பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பும் விசித்திராவும் வரக்கூடிய ஒரு எபிசோடு இருக்கிறது. அந்த எபிசோடில் பிரதீப்பும் விசித்திராவும் மிகவும் சீக்கிரமாக எழுந்து விடுவார்கள் பிற போட்டியாளர்கள் நாய் குரைத்த பின்னரே எழுவார்கள். 

அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் டீ குடித்துக் கொண்டு ஒரு உரையாடல் நிகழ்த்துவார்கள். அது மிக மிக அழகானதாக இருக்கும். அப்போது விசித்ரா பிரதீப்பிடம் 50 லட்சம் உனக்கு கிடைத்தால் நீ என்ன செய்வாய் என்று கேட்பார். அதற்கு பிரதீப், இங்கே ஒரு 50 லட்சம் வரும். வெளியே ஸ்பான்சராக ஒரு பத்து லட்சம், அதன்பின்னர் ஒரு பத்து லட்சம், இதை தவிர்த்து ஜி ஸ்கொயரில் இருந்து நிலம் தருவார்கள். 

அதில் 40 லட்சத்திற்கு ஒரு வீட்டைக் கட்டி அதில் சித்தியை நான் உட்கார வைத்து விடுவேன். அவர்கள் கையில் ஒரு 10 லட்ச ரூபாயை கொடுத்து ஒரு பத்து வருடங்களுக்கு என்னை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று சொல்வேன் என்று சொல்வார்.

அப்போது விசித்திரா பிரதீப் உனக்கு ஒன்றும் வேண்டாமா என்று கேட்பார் அதற்கு பிரதீப் கலை இருக்கிறது அல்லவா. எனக்கு அது போதும் என்பார். 

நான் பர்சனலாக பிரதீப்பை சந்தித்து இருக்கிறேன். நானும் அவனும் நிறைய பேசி இருக்கிறோம். நாங்கள் பேசும்போது எங்களுக்கு தென்பட்ட பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால், பிக் பாஸ் டைட்டில் ஆனது மற்றவர்களுக்கு கிடைக்கும் என்ற கனவை கூட நம்மால் நினைத்து பார்க்க முடியாது” என்று பேசினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்