லோகியின் எல்சியூவில் லேடி டானாகா இணைகிறாரா அனுஷ்கா? கோலிவுட்டை பற்ற வைக்கும் தகவல்!
நடிகை அனுஷ்கா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லேடி டானாக நடிக்க உள்ளார் என்ற தகவல் மிக வேகமாக பரவி வருகிறது.

தமிழில் கார்த்தி ஹீரோவாக நடித்த கைதி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்தப் படத்தில் கார்த்தியின் நடிப்பு இந்திய ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இந்தப் படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. இப்போது, படத்தின் இரண்டாம் பாகமான கைதி 2 தயாராக உள்ளதாகவும் அதில் நடிகை அனுஷ்கா நடிக்கப் போகிறார் என்றும் பரபரப்பான தகவல்கள் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
கைதி 2
தெலுங்கு மக்களின் ஆஸ்தான நாயகிகளின் பட்டியலில் எப்போதும் இணைந்தே இருப்பவர் நடிகை அனுஷ்கா. அவர் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என திரையுலக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது சர்தார் 2 படத்தை முடித்துள்ள கார்த்தி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கைதி 2 படத்திக்கு தயாராகி வருகிறார் என்றும் அந்தப் படத்தில் அனுஷ்கா நடிப்பார் என்ற பரபரப்பான தகவல் வைரலாகியுள்ளது.