D imman On sivakarthikeyan: அவங்க மனைவி நிலைமை.. சொல்ல மாளாது.. டி. இமான் மாதிரி நிறைய பேர்.. - வெளுத்த அனுபரமி!
பிரபலங்களின் கருப்பு பக்கத்தை நடிகை அனுபரமி ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நடிகர் என்றாலே பல இடங்களுக்கு செல்ல வேண்டும், நிறைய பேரை கட்டிப்பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் அவரின் மனைவி பற்றி யாராவது யோசித்து இருக்கிறீர்களா? அவரின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்று யூகித்திருக்கிறீர்களா..? அவரின் உணர்வுகளை ஆண்கள் எந்த அளவுக்கு மதிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
நிறைய சினிமா பிரபலங்களின் மனைவிகள் என்னுடைய நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய கதைகளை வெளியில் சொல்லவே முடியாது. அந்த விஷயத்தை ஒரு சின்னதாக பேசினால் கூட, எல்லோரும் துடிதுடித்து போய்விடுவார்கள்.
எல்லாருமே அவ்வளவு வலியில், அவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். உண்மையில் சொல்ல போனால், இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய ஒரு நடிகர் 15 நாள் ஷூட்டிங் செய்து விட்டு வந்தால், வீட்டிற்கு வரும் பொழுது மனைவியிடம் பேசவே மாட்டார். அப்படியே பெட்ரூமுக்கு செல்வார். இரண்டு நாட்கள் அந்த பெட்ரூம் திறக்கவே திறக்காது.
அவருக்கு தேவையானது சொல்லப்படும். அதை உதவியாளர் உள்ளே எடுத்துச் செல்வார் அவ்வளவுதான். மனைவியிடம் அன்பாக பேசும் பிரபலங்கள் மிக மிகக் குறைவு. ஆனால், சிலர் விதிவிலக்காக வீட்டுக்குள் வரும்பொழுதே, தொழில் வேறு, வீடு வேறு என்பதை அழகாக புரிந்து கொண்டு, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக வாழ்கிறார்கள்.
இப்படி இருக்கும் பொழுது, அந்த மனைவிமார்கள் மிகவும் கேஷுவலாக டிரைவரிடமோ அல்லது உதவியாளரிடமோ பேசினால், அதை இவர்கள் பெரிய விவாத பொருளாக, வேறு மாதிரியாக கொண்டு செல்வார்கள்.
எல்லா ஆண்களுமே டி. இமான் செய்யக்கூடிய தவறை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது கணவனுக்கு அந்த மனைவி எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்து, வீட்டை அக்கறையாக பார்த்துக் கொண்டு, உறுதுணையாக இருந்த போதிலும், அந்த பெண் வேறு யாருடனாவது அந்தரங்க தொடர்பு வைத்துக்கொண்டால், அவளை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கேவலப்படுத்துவது என்பது இங்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் அதை ஆண் செய்யலாம். அதை இந்த சமூகம் எந்த கேள்வியும் கேட்பதில்லை.
சிவகார்த்திகேயன் விஷயத்தைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க அவர் தன்னை மிகவும் பாசிட்டிவான மனிதராக காட்டிக் கொண்டது என்பது ஒரு தவறான விஷயம். விஜய் சேதுபதியை பாருங்கள், எல்லா நேர்காணலிலும், என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள். என்னிடமும் எல்லா கெட்ட விஷயங்களும் இருக்கிறது என்பதை மிகவும் ஓப்பனாக பேசுகிறார்.
ஒரு மனிதன் அடுத்த நொடியில், என்னவாக மாறுகிறான் என்பது அந்த சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. சிவகார்த்திகேயனை அவர்கள் கட்டம் கட்டி இருக்கிறார்கள். தெரிந்தே திட்டமிட்டு உலகத்தாரிடம் கற்களைக் கொடுத்து டி. இமான் மூலமாக அடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் இந்த விஷயத்தில் இருந்து, சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் மீண்டும் வந்து விட வேண்டும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்