Anupama Parameshwaran: டாக்ஸிக் காதல்.. இது தான் என் லவ் அட்வைஸ்.. அனுபமா பரமேஸ்வரன் டிப்ஸ் வேளை செய்யுமா?
Anupama Parameshwaran: நடிகை அனுபமா பரமேஸ்வரன் எது காதல், எது டாக்ஸிக் காதல் என்பது பற்றியும் அது குறித்த தனது அட்வைஸையும் கூறியுள்ளார்.

Anupama Parameshwaran: மலையாள நடிகையாக அறிமுகமானாலும் அனுபமா பரமேஸ்வரன் என்ற பெயரை அறியாத தமிழ் ரசிகர்களே இருக்க முடியாது. ஏனென்றால் இவர் அறிமுகமான படம் அப்படி.
பிரேமம் நாயகி
மாடல் அழகியாக இருந்த அனுபமா பரமேஸ்வரன் கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்தப் படம் கேரளா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் மிகப் பெரிய வைப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால், இந்தப் படத்தின் மீதும் படத்தின் கதாநாயகிகள் மீதும் தென்னிந்திய ரசிகர்கள் பித்து பிடித்துப் போய் இருந்தனர்.
ஓவர் டேக் செய்ய முடியாத நடிகை
நிவின் பாலியின் ஒவ்வொரு காதலிகளையும் அவர் ரசித்ததை விட இவர்கள் அதிகளவு ரசித்திருப்பார்கள். அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதால் தான் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இந்தப் படம் ரீமேக் செய்ய.ப்பட்டது. என்னதான் ரீமேக் செய்திருப்பினும் ஒரிஜினல் படத்தை யாராலும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை,
அனுபமா பரமேஸ்வரனின் சுருண்ட கூந்தலும், அடர்த்தியான புருவமும், கூரிய கண்களும் தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால், அவருக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தன.
தமிழில் ரசிகரகள்
அதைத் தொடர்ந்து தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன் போன்ற படங்களில் கமிட் ஆனார். அதே சமயம், அவர் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து முக்கிய நடிகையாக மாறிவிட்டார்.
அனுபமாவின் காதல் அட்வைஸ்
இந்த சமயத்தில் இவர், காதல் குறித்த அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். இவரது இந்த அட்வைஸ் தான் இப்போது அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
அனுபமா பரேமேஸ்வரன் சமீபத்தில் வோக் இந்தியாவுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில், காதல் குறித்து பேசிய அவர், நான் எப்போதும் உன்னை காதலிப்பேன் என்ற வசனம் தான் உலகத்தில் நான் பெரிதாக நினைக்கும் பொய். இது இரண்டு பேருக்கான காதலில் எப்போதும் நடக்காத ஒன்று. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
டைக்ஸிக் காதலுக்கு அட்வைஸ்
மேலும் பேசிய அவர், டாக்ஸிக் உறவுகள் குறித்தும் பேசியுள்ளார். நீதான் என் உயிர், நீ இல்லாமல் நான் இல்லை என பேசுவது போன்ற டாக்ஸிக் உறவு எங்கேயுமே இல்லை. இப்படி இருப்பவர்களுக்கு எல்லாம் ஒரே அட்வைஸ் தான். அப்படியே ஓடிவிடுங்கள் என்பது மட்டும் தான் என அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
மனதை லேசாக்கும் படம்
மேலும் பேசிய இவர், தான் நடித்த படங்களிலேயே மிகவும் பிடித்த படம் பிரேமம் தான். எனக்கு எப்போதெல்லாம் மனம் ஒரு மாதிரி இருக்கிறதோ அப்போதெல்லாம் அந்தப் படத்தை பார்த்தால் மனம் லேசாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்