Actress Anju: ‘ அய்யோ… என்னால தாங்கவே முடியல.. இன்னொருத்திய நடுவீட்ல வச்சுக்கிட்டு’ - அஞ்சு பேட்டி!
Actress Anju: ஏற்கனவே சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததும், டைகர் பிரபாகர் என் மீது காட்டிய அக்கறையும், நாம் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவை என்னை எடுக்க வைத்தது. - அஞ்சு பேட்டி!
Actress Anju: நடிகை அஞ்சு தனது முன்னாள் காதலரான டைகர் பிரபாகர் உடன் வாழ்ந்த கசப்பான சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து நாதஸ் மீடியா சேனலுக்கு பேசிய அவர், “கல்யாண வாழ்க்கையை பொருத்தவரை, நாம் அதனை மிகச் சரியாக ஆராய்ந்து, நமக்கான பார்ட்னரை தேர்வு செய்ய வேண்டும். ஆரம்பத்தில், மிகவும் நன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொண்டு விட்டு, பின்னால் கஷ்டப்பட்டு கொண்டிருக்ககூடாது.
சில பேர் அதில் வரும் கஷ்டங்களை சமாளித்து, அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்வார்கள். ஆனால் சில பேருக்கு அப்படி இருப்பதில்லை; நாம் தவறான முடிவை எடுத்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியை அந்த வாழ்க்கை கொடுத்து விடுகிறது.
டைகர் பிரபாகர் மீது காதல் இல்லை
எனக்கு டைகர் பிரபாகர் மீது காதல் எல்லாம் வரவில்லை. அந்த சமயத்தில் நான் என்னுடைய நடிப்பு கேரியரை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் ஒரு கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் சிறப்பு தோற்றத்தில் டைகர் பிரபாகர் நடித்தார். அப்போது டைகர் பிரபாகர் என்னிடம், கன்னட படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார். நான் நல்ல கேரக்டர்கள் வந்தால், நிச்சயம் நடிப்பேன் என்று கூறினேன்.
நானும், குஷ்புவும் நடிப்பதாக இருந்தது.
இதையடுத்து அவர், நான் அடுத்ததாக கன்னட படம் ஒன்று எடுக்க இருக்கிறேன். அந்த படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள் அதில் ஒரு கதாநாயகியாக நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் அந்த சமயத்தில் மலையாளத்தில் ஒரு படத்தில் புக் ஆகியிருந்தேன். அந்த படத்தில் நானும், குஷ்புவும் நடிப்பதாக இருந்தது. இதை நான் டைகர் பிரபாகரிடம் சொன்னேன். உடனே அவர், முடிவை நீங்களே எடுங்கள் என்று என்னிடம் கூறினார்.
இதையடுத்து நான் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது, கன்னடத்தில் நடித்தால், ஒரு புது மொழியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று முடிவு செய்து, இந்த வாய்ப்பை தேர்வு செய்தேன். அந்தப் படத்தில் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. என்னை அவர் மிகவும் அக்கறையாக பார்த்துக் கொண்டார். நான் ஏற்கனவே சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததும், டைகர் பிரபாகர் என் மீது காட்டிய அக்கறையும், நாம் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவை என்னை எடுக்க வைத்தது.
கிட்டத்தட்ட நான் அவரை திருமணம் செய்யும்பொழுது, அவருக்கு என்னுடைய அப்பா வயது இருக்கும். ஆனால் நான் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் சொல்லப்போனால், நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவ்விங் டுகெதரில்தான் இருந்தோம். அப்போது எனக்கு சில விஷயங்கள் தெரியவந்தது.
முன்னதாக, அவருக்கு திருமணம் ஆகி இருக்கிறது. ஒரு குழந்தை இருக்கிறது. அவரது மனைவி விட்டு சென்று விட்டார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால், அதற்கு முன்னதாக அவருக்கு திருமணம் ஆகி இருப்பதும், அந்த மனைவிக்கு கிட்டத்தட்ட என் வயதை விட மூத்த வயதில் 3 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. அது குறித்து அவர் என்னிடம் வாயே திறக்கவில்லை.
அதை நான் தெரிந்து கொண்ட பொழுது, நான் அப்படியே இடிந்து உட்கார்ந்து விட்டேன். காரணம் மொத்த வீட்டையும் எதிர்த்து நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். இருப்பினும், வந்தது வந்து விட்டோம். என்னவாக இருந்தாலும், சமாளித்து வாழ்ந்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் இதற்கிடையே, அவருக்கு இன்னொரு பெண்ணுடன் காதல் மலர்ந்தது. வீட்டிலேயே அது தொடர்பான உல்லாச நிகழ்வுகள் நடந்தன. அப்போது எனக்கு மகன் வேறு பிறந்து விட்டான். என்னுடன் சேர்ந்து அவனும் கஷ்டப்படக் கூடாது என்ற காரணத்திற்காக, நான் அவரிடம் இருந்து விலகி பிரிந்து வந்து விட்டேன். அவரது இறப்பிற்கு கூட நான் செல்லவில்லை” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்