Actress Andhor Ramya: ‘எதுவும் இங்க நிரந்தரம் கிடையாது.. எல்லாம் அந்த மொமண்டுக்காக’ - நடிகை ரம்யா!
என்னுடைய வாழ்க்கை பயணத்திலிருந்து சொல்ல வேண்டுமென்றால், எதுவுமே இங்கு நிரந்தரமானவை கிடையாது. எல்லாம் அந்தந்த தருணத்திற்காக நிகழ்பவையே.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் குறித்தும், அதில் இருந்து தான் எப்படி வெளியே வந்தேன் என்பது குறித்தும் நடிகை ரம்யா பேசி இருக்கிறார்.
இது குறித்து வாவ் லைஃப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய ரம்யா, “ வாழ்க்கையில் எல்லோருக்கும் கஷ்டமான காலக்கட்டமானது வந்தே தீரும். அதுதான் நம்முடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக கூட அமையும். அப்படி எனக்கும் ஒரு கஷ்டமான காலகட்டமானது வந்தது. (விவாகரத்து)
அந்த சமயம் நான் மிகவும் சிறிய வயது பெண்ணாக வேறு இருந்தேன். அதனால் நான் மிகவும் குழப்பம் அடைந்து இருந்தேன் அதனை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.
நம்மை ஏன் திடீரென்று வேறு மாதிரியாக பார்க்கிறார்கள் இனிமேல் நாம் நம் வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்பது ரீதியான எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் எனக்கு கிராஸ் ஃபிட் என்ற உடற்பயிற்சி அறிமுகமானது. அதை செய்ய ஆரம்பித்தேன்.
அது அப்படியே பளு தூக்குதல் என்ற பயிற்சியை நோக்கி என்னை தள்ளியது.அங்கும் சென்றேன் . முறையான பயிற்சிகளை செய்து அது சம்பந்தமான போட்டிகளில் பங்கேற்றேன்.
அப்பொழுது அங்கிருந்த ஆண்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார்கள். தொடர்ந்து நான் தூக்கவே முடியாத ஒரு எடையைக்கொடுத்து என்னை தூக்கச் சொன்னார்கள். அவர்கள் கொடுத்த அந்த உற்சாகத்தில் அந்த எடையை தூக்கினேன் அப்போதுதான் எனக்கு பல விஷயங்கள் புரிய வந்தது. இதனையடுத்து நான் அதில் மிகவும் தீவிரமாக இறங்க ஆரம்பித்தேன்
எனக்கு எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், மிக மிக நேர்த்தியாக இருக்க வேண்டும். இது நான் செய்யும் வேலைகள் மட்டுமல்ல. எனக்காக பிறர் செய்யும் வேலைகளிலும், நான் அதை எதிர்பார்ப்பேன். அதனால்தான் என்னமோ நான் பிற மனிதர்களிடமிருந்து மிகவும் தூரமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
எனது பக்கத்தில் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் ஒருவர் அமர்ந்திருக்கும் பொழுது, அவர் என்னிடம் உதவி கேட்கும் பட்சத்தில், முதலாவதாக நான் அவரது கையை பிடிப்பேன். இந்த மாதிரியான ஒரு நெருக்கம் அவர் என்னிடம் மனம் விட்டு பேசுவதற்கான ஒரு சூழ்நிலையை அவரது மனதிற்குள் உருவாக்கும்.
என்னுடைய வாழ்க்கை பயணத்திலிருந்து சொல்ல வேண்டுமென்றால், எதுவுமே இங்கு நிரந்தரமானவை கிடையாது. எல்லாம் அந்தந்த தருணத்திற்காக நிகழ்பவையே. ஒரு நாள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது சோகமாக இருந்தாலும் அது அன்றைய நாளுக்கு உரித்தானது தான். வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ளும் முன்னால் வாழ்க்கையானது சென்று விடும். ஆகையால் நாம் நம்முடைய தருணங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்