Namita: 'கல்யாணம் அன்னைக்கே எங்களுக்குள்ள சண்டை.. டிசிப்பிளீன் ரொம்ப முக்கியம்'- நமீதா ஷேரிங்ஸ்
Namita: நடிகையும் அரசியல்வாதியுமான நமீதா தன் காதல் குறித்தும், தன் திருமணம், குடும்ப வாழ்க்கை குறித்தும் காதலர் தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டியில் நிறைய பேசியுள்ளார்.

Namita: நடிகையும் அரசியல்வாதியுமான நமீதா தன் காதல் குறித்தும், தன் திருமணம், குடும்ப வாழ்க்கை குறித்தும் காதலர் தினத்தை முன்னிட்டு கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நிறைய பேசியுள்ளார். இந்தப் பேட்டியில் நமீதாவுடன் அவரது காதல் கணவர் வீரும் உடன் இருந்தார்.
நான் சைட் அடிச்சேன்..
அப்போது பேசிய நமீதா, " நான் முதல் முதல்ல வீர்ரை பாக்கும் போது அவரு ரொம்ப நல்லா உயரம். அதே மாதிரி நல்ல கட்டுமஸ்தான உடம்பு இருந்தது. இது ரெண்டும் சேர்ந்த மாதிரி எல்லாம் நிறைய பேர் இருக்க மாட்டாங்க. அதுனால அவர பாத்து நான் சைட் அடிச்சேன். ஆனா, அவர் என்ன கண்டுக்கவே இல்ல.
இவருக்காக எல்லாம் மாத்திக்கிட்டேன்
நான் கல்யாணத்துக்கு அப்புறம் வீராக்காக என்னை கொஞ்சம் மாத்திருக்கேன். வீரா ரொம்ப அமைதியான ஆளு. ஆனா நான் அப்படியே அவருக்கு ஆப்போசிட். இவருக்காக நான் பேசுற விதத்த கொஞ்சம் மாத்துனேன்.
எங்க அம்மா இவர பாத்ததுக்கு அப்புறம் உனக்கு ஒரு வைரம் கிடைச்சிருக்கு மிஸ் பண்ணிடாதன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் வீரா என் கூட இருக்கணும். எனக்காக இருக்கணும்ன்னு கொஞ்சம் பெண்கள் எப்படி நடந்துப்பாங்களோ அந்த மாதிரி என்ன மாத்திக்கிட்டேன். கொஞ்சம் சாப்ட் ஆனேன்" என்றார்.
ரொம்ப டிசிப்பிளீன்..
அப்போது பேசிய வீரா, "இவங்க ரொம்ப டிசிப்பிளின் ஆன ஆளு. சொன்னது சொன்ன மாதிரி செய்யணும். சில விஷயம் நம்ம கைய மீறி ஏதாவது நடக்கும். அதுக்கு எல்லாம் ரொம்ப கோவப்பட்டு கத்துவாங்க. இப்போ குழந்தைங்ககிட்ட கூட டிசிப்பிளீனா இருக்க சொல்லி தருவாங்க.
டெய்லி ரொட்டீன் சரியா இருக்கணும். அந்த டைம்ல ஆபிஸ் வேலையா இருந்தாலோ, இல்ல மீட்டிங்ல இருந்தாலோ இவங்க கிட்ட இருந்து சவுண்ட் வரும். வீரா டைம் என்ன ஆச்சு தெரியும் இல்லன்னு. அதெல்லாம் கொஞ்சம் சரிபண்ணுனா நல்லா இருக்கும்" என்றார்.
ஈகோ கூடாது
அப்போது குறுக்கிட்ட நமீதா, "தம்பதி நடுவுல ஈகோ இருக்க கூடாது. அப்படி இருந்தா அவங்களால சின்ன சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் கூட பண்ண முடியாது. அவங்களுக்குள்ள நல்ல அட்டெர்ஸ்டாண்ட் இல்லாம போயிடும் என்றார்.
கல்யாணத்துலயும் சண்டை
அப்போது தனது திருமணம் பற்றி பேசிய நமீதா, கல்யாணம்ன்னு நெனச்சாலே எனக்கு ஒரே நியாபகம் தான் வரும். கல்யாணத்துக்கான ஏற்பாடு எல்லாம் செஞ்சிட்டு இருக்காங்க. அங்க எங்க ரெண்டு பேருக்குள்ளயும் சண்ட போயிட்டு இருக்கு. திருப்பதில எனக்கு தெலுங்கு முறையில கல்யாணம் நடந்தது. அப்போ, வெத்தலையில சீரகம் எல்லாம் வச்சு பொன்னு மாப்பிள்ளை தலையில வைப்பாங்க. அப்போ, நான் என்ன பண்ணுனேன் டிரெஸ் மாத்திட்டு வர டைம்ல அத குப்பை தொட்டியில போட்டுட்டேன்.
இதெல்லாம் மறக்க மாட்டேன்
வீரா என்னோட நல்லா ஹைட்டா இருக்குறதால அத பாத்துட்டான். தலையில இருந்தது எங்கன்னு கேக்குறப்போ நான் அதை குப்பை தொட்டியில போட்டுட்டேன்னு சொன்னேன். அப்படி எல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லி,குப்பை தொட்டியில இருந்து எடுத்து தலையில வைக்க சொல்லி. நானும் அதை செஞ்சேன். இப்போவும் அதை நான் மறக்க மாட்டேன்.
எனக்கு என் வருங்கால கணவர் பத்தின நம்பிக்கை இருந்தது. அவருக்கான தகுதிகள் என்னென்ன, வாக்குறுதிகள் என்னென்னன்னு நான் டைரில எழுதி வச்சிருக்கேன். அதுல இருக்க மாதரி தான் வீரா இருந்தாரு. அதை நான் அவர்கிட்டயும் காட்டிருக்கேன்" என கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்