"எல்லாம் சந்தோஷம் தான்.. ஆனா சும்மா பேசிகிட்டே இருக்கிங்களே".. பட்டுன்னு பேசிய நமீதா!
நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர், உச்சத்தில் இருக்கும் போதே சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அறிவிப்போடு நிறுத்திவிடாமல், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சி, கட்சிக்கான கொடி, கட்சிப் பாடல் போன்றவற்றை அறிமுகம் செய்தார். பின், கட்சி நிர்வாகிகளுடன் முதல் மாநாட்டை நடத்த தீவிர முயற்சி மேற்கொண்டு அதனை சிறப்பாக நடத்தியும் முடித்தார்.
மாநாட்டில் விஜய் பேச்சு
விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த தனது கட்சியின் முதல் மாநாட்டில், கட்சிக் கொள்கை, தற்போதைய அரசியல் எப்படி உள்ளது. அதை தான் எப்படி கொண்டு செல்லப் போகிறேன் என பலவற்றைப் பேசினார்.
இதையடுத்து, விஜய்யின் கட்சி மாநாடு மற்றும் அவரது பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
நமீதா அட்வைஸ்
நடிகை நமீதா செய்தியாளர்களை சந்தித்து பேசிய சமயத்தில் பத்திரிகையாளர்கள், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய நமீதா, மக்களுக்கு சேவை செய்ய பலர் அரசியலுக்கு வருகின்றனர். தளபதி விஜய்யின் அரசியல் வருகை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும் விஜய் வீணாக பல விஷயங்களை அவர் பேசாமல்,செயலில் எல்லா விஷயத்தை காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இவரின் கருத்துகள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் நடிகர் விஜய் கட்சி மாநாட்டில் பேசியவற்றை வைரலாக்கி வருகின்றனர்,
நடிகர் விஜயகாந்த்தின் எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நமீதா. பின்னர் அவர், மகா நடிகன், ஏய், பில்லா, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். பின்நாளில் அவருக்கு சினிமா மார்க்கெட் குறையவே கவர்ச்சி பக்கம் திரும்பினார். இவரது மச்சான் எனும் வார்த்தையை கேட்பதற்காகவே பலரும் தவமாய் காத்திருந்த நிலையில், திடீரென அரசியல் பிரவேசம் மேற்கொண்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொண்ட பற்றால் அவர், 2016ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர், அவர் மறைவிற்குப் பின் பாஜகவில் இணைந்து தற்போது அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
விஜய் உடன் திரைப்படத்தில் நடித்தவர் என்ற முறையிலும், அவருக்கு முன்பு இருந்தே அரசியலில் இருந்து வருவதாலும் அவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சினிமாவிலிருந்து விலகி அரசியல்
முன்னதாக, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார், விஜய். அதைத் தொடர்ந்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பதுவே தமது இலக்கு என தெளிவாகத் தெரிவித்திருந்தார், விஜய்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடிகர் விஜய் வெற்றிகரமாக கடந்த 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்தி முடித்தார். அந்த மாநாட்டில், ஆளும் திமுக, மத்தியில் உளஅள பாஜக ஆட்சியையும் தலைவர்களையும் வெகுவாகவே விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.