முன்னாள் காதலர்களே பார்த்துக்கோங்க.. இதுதான் டார்ச்சர்.. டாக்சிக் இல்லாத காதல்.. வகுப்பெடுத்த நடிகை அமலா பால்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  முன்னாள் காதலர்களே பார்த்துக்கோங்க.. இதுதான் டார்ச்சர்.. டாக்சிக் இல்லாத காதல்.. வகுப்பெடுத்த நடிகை அமலா பால்!

முன்னாள் காதலர்களே பார்த்துக்கோங்க.. இதுதான் டார்ச்சர்.. டாக்சிக் இல்லாத காதல்.. வகுப்பெடுத்த நடிகை அமலா பால்!

Malavica Natarajan HT Tamil
Published May 08, 2025 03:44 PM IST

நடிகை அமலா பால், காதல் என்ற பெயரில் நடந்த டார்ச்சர்களில் இருந்தும் டாக்சிகாக இருந்த முன்னாள் காதலர்களுக்கும் எது காதல் என்பதை பற்றி பேசி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் காதலர்களே பார்த்துக்கோங்க.. இதுதான் டார்ச்சர்.. டாக்சிக் இல்லாத காதல்.. வகுப்பெடுத்த நடிகை அமலா பால்!
முன்னாள் காதலர்களே பார்த்துக்கோங்க.. இதுதான் டார்ச்சர்.. டாக்சிக் இல்லாத காதல்.. வகுப்பெடுத்த நடிகை அமலா பால்!

அந்தப் படத்திற்கு பின் அவர் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். குறுகிய காலத்திலேயே மிகவும் புகழ் பெற்ற நடிகையாகவும் மாறினார். இந்தப் படத்தின் வெற்றி அவரை தமிழ், மலையாள சினிமாவைத் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி சினிமாவிற்கும் அழைத்துச் சென்றது.

வைரலாகும் அமலா பால்

இவர் தற்போது காதல் பற்றியும், தனது முன்னாள் காதலர் பற்றியும் பேசிய வார்த்தைகள் தான் இணையத்தை மொத்தமாய் ஆக்கிரமித்துள்ளது. அவர், கலாட்டா மீடியாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, அமலா பால் தனது கணவர் ஜகத் தேசாய்க்கு திருமண நாள் வாழ்த்து கூறி போட்ட பதிவில் தன்னுடைய முன்னாள் காதலர்களை குறிப்பிட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

ரிவெஞ்ச் தான்

இந்தக் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் அவர்களை ரிவெஞ்ச் எடுக்கத் தான் என பதிலளித்து அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார். அந்த வீடியோவில், "அந்த போஸ்ட் எதுக்குன்னா நம்பள நிறைய பேர் லவ்ன்னு சொல்லி ஏமாத்துறாங்க. லவ் வந்து இந்த உலகத்துலயே ரொம்ப அடல்ட்ரேட்டட் வேர்ட்(கலப்படம்). அடல்ட்ரேட்டட்ன்னு சொல்றதுக்கு காரணம் என்னென்ன அந்த வார்த்தைய ரொம்ப மிஸ் யூஸ் பண்றாங்க.

லவ்ல டாக்சிக், டார்ச்சர்

லவ்ன்னு சொல்லி இங்க நிறைய டார்ச்சர் பண்றாங்க. லவ்வ வந்து எப்படி டாக்சிக் பண்ண முடியும். அதுதான் இந்த உலகத்துல அதிகமா நடந்திட்டு இருக்கு. நான் ஒரு உண்மையான லவ் எப்படி இருக்கும்ன்னு வாழ்ந்து பாக்கும் போது தான் தெரியுது. ஓ இது தான் லவ்வா.. கடவுளே இப்படி ஒரு லவ் பாசிபிளா? லவ் பண்ணா சந்தோஷமா இருக்க முடியுமா? எனக்கு நானாவே இருக்க முடியுமான்னு எல்லாம் யோசிச்சேன். சோ. அதுக்கான ஒரு சின்ன ரிவெஞ்ச் தான் நான் போட்ட போஸ்ட்" என மேடையிலேயே பேசினார்.

அமலா பாலுக்கு பெருகும் ஆதரவு

இவரது பேச்சுக்கு பலரும் ஆதரவு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அத்தோடு நில்லாமல் அங்கு அரங்கத்தில் இருந்த பலரும் அமலா பாலின் கருத்து ஒத்துப் போனதாக பல ரியாக்ஷன்களை கொடுத்தனர். காதல் பற்றியும் காதல் என்ற பெயரில் நடக்கப்பட்டு வரும் டாக்சிக் வேலைகள் பற்றியும் அமலா பால் சொன்ன கருத்து தற்போது சோசியல் மீடியா முழுவதும் வைரல் கண்டென்டாக மாறி வருகிறது.

அமலா பாலின் திருமண நாள் வாழ்த்து பதிவு

அமலா பால், தன் காதல் கணவர் ஜகத் தேசாய்க்கு எழுதிய திருமண நாள் வாழ்த்து பதிவில், "என் அற்புதமான கணவருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! இந்த வருடம் குமரகோமில் நடந்த மறக்க முடியாத ஆச்சரியம், ஒவ்வொரு நாளும் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு மனிதனைப் பெற்றிருப்பது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் என்பதை நினைவூட்டியது. எங்கள் முதல் கல்யாண புரொபோசல் முதல் இடையில் உள்ள ஒவ்வொரு இனிமையான ஆச்சரியம் வரை, காதலுக்காக உங்கள் உண்மையான முயற்சி எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது!

முன்னாள் காதலர்களுக்காக

வாழ்நாள் முழுவதும் சாகசங்களுடனும் சிரிப்புடனும் அன்புடனும் செல்லட்டும். என்னுடைய முன்னாள் காதலர்களுக்கு இந்த அழகான காதல் எப்படி சாத்தியமானது என்பதை காட்டுவதற்காகவே இது எனக் குறிப்பிட்டு அமலா பால் ஜகத் தேசாயுடன் இருந்த அழகிய நினைவுகள் கொண்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அமலா பால் திருமணங்கள்

சினிமா வாழ்க்கையில் பிஸியாக இருந்த நடிகை அமலா பால், இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே அவரை விவாகரத்து செய்தார். அந்த சமயத்தில் இவர்களது விவாகரத்து தமிழ் சினிமா வட்டாரத்தில் மிக பரவலாக பேசப்பட்டது. பின், அமலா பால் வழக்கம் போல சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

பின், அமலா பால், தொழில் முனைவோரான ஜகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இலாய் என்ற மகன் உள்ளார். தற்போது அமலா பால் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகரிகளுடன் பகிர்ந்து வருகிறார்.