'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..
நாட்டில் நிலவும் போர் சூழல் குறித்து கருத்து தெரிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..
நாட்டில் போர்ச் சூழல் நிலவும் நிலையில், சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை சமூக வலைதளங்கள் மூலம் நமது ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக செய்திகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இவர்களில் சிலர் போர் வேண்டாம் என்றும், இதனால் நஷ்டம் தவிர வேறு எதுவும் கிடைக்காது என்றும் கூறுகின்றனர். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இதுபோன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மோதலை விட அமைதிக்கு முன்னுரிமை
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகைகளுல் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலை மற்றும் போர் சூழல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டார்.
