Actress Aishwarya Rai: அழகுன்னா ஐஸ்வர்யா ராய் மட்டும் தான்.. ஆராய்ச்சியே நடந்திருக்கே!
Actress Aishwarya Rai: உலகின் மிக அழகான பெண்ணின் முகமாக நடிகை ஐஸ்வர்யா ராயின் முகம் உள்ளதாக சில ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது.

Actress Aishwarya Rai: அழகுன்னா ஐஸ்வர்யா ராய் மட்டும் தான்.. ஆராய்ச்சியே நடந்திருக்கே!
Actress Aishwarya Rai: ஐஸ்வர்யா ராய் நிச்சயமாக உலகின் மிக அழகான பெண்களில் ஒருவர் தான். இன்று எத்தனையோ பேர் உலக அழகி பட்டம் பெற்றிருந்தாலும் இந்தியாவில் உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் மட்டும் தான் என்பது போலவே பேச்சுகள் இருக்கும். 1994 ஆம் ஆண்டில் மிஸ் வேர்ல்டாக அவர் முடிசூட்டப்பட்டார், பின்னர் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்து சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
சமீபத்தில், ஒரு முக பகுப்பாய்வு கருவி, அவரது முக அம்சங்களை ஆராய்ந்து, அவரது முகத்தின் பெண்மை தன்மையே அவர் மிக அழகான முகங்களில் ஒருவராகத் திகழ காரணம் என்று கூறியுள்ளது.
