ஹாப்பி 18.. வதந்திகளை தவிர்த்து வாழ்த்து மழையில் நனைந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஹாப்பி 18.. வதந்திகளை தவிர்த்து வாழ்த்து மழையில் நனைந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதி..

ஹாப்பி 18.. வதந்திகளை தவிர்த்து வாழ்த்து மழையில் நனைந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதி..

Malavica Natarajan HT Tamil
Published Apr 21, 2025 05:35 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராய் அவர் கணவர் மற்றும் மகளுடன் தன் 18ஆவது திருமண ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.

ஹாப்பி 18.. வதந்திகளை தவிர்த்து வாழ்த்து மழையில் நனைந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதி..
ஹாப்பி 18.. வதந்திகளை தவிர்த்து வாழ்த்து மழையில் நனைந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதி..

ஐஸ்வர்யா ராயின் 18 ஆண்டு திருமண ஆண்டு விழா

இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு மகள் பிறந்தாள். அவளுக்கு ஆராத்யா என பெயரிட்டனர். இதையடுத்து இந்தத் தம்பதி நேற்று ஏப்ரல் 20 ஆம் தேதி தங்களது 18 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.

குடும்பத்தோடு கொண்டாட்டம்

இதனை ஐஸ்வர்யா ராய் அவரது இன்ஸ்டாகிராமில் போட்டோவை பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராய் எடுத்த அந்த செல்ஃபி புகைப்படத்தில், மூவரும் கேமராவுக்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்துள்ளனர். அபிஷேக் பச்சன் ஆராத்யாவைப் பிடித்துக் கொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா அருகில் ஆராத்யா தனது முகத்தை வைத்திருக்கிறார். மூவரும் வெள்ளை உடையில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, ஐஸ்வர்யா வெள்ளை நிற இதய எமோஜியை பதிவிட்டுள்ளார்.

வாழ்த்து மழையில் நட்சத்திர தம்பதி

இந்த பதிவுக்கு, ஒரு ரசிகர், "நீங்கள் இருவரும் இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஒரே புகைப்படத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். "கடவுள் இந்த அழகான குடும்பத்தைக் காப்பாற்றுவார். உங்களை நேசிக்கிறேன், மேடம்," என்று ஒரு கருத்து கூறியுள்ளார்.

"ஓ மை காட். இந்த படத்தைக் கண்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர், "இந்த பதிவு விவாகரத்து வதந்திகளை அனைத்தையும் அடித்து நொறுக்குகிறது" என்று கூறியுள்ளார்.

விவாகரத்து வதந்திகள்

2024 ஜூலை மாதம் அனந்த் அம்பானியின் திருமணத்தின் போது ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பத்திற்கு இடையேயான மோதல் குறித்த வதந்திகள் பரவியது. ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் தனித்தனியாக திருமண நிகழ்ச்சிக்கு வந்ததால் இந்த வதந்தி பரவியது. ஆனால், இந்த ஜோடி அதை பொருட்படுத்தாமல், ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அந்த வதந்திகளை மெதுவாக மறுத்து வந்தஏனர்.

அபிஷேக் பச்சனின் திரைப்படங்கள்

ரெமோ டெசோசா இயக்கிய 'பி ஹேப்பி' படத்தில் அபிஷேக் கடைசியாக நடித்தார். 'பி ஹேப்பி' என்பது ஷிவ் (அபிஷேக்) என்ற அர்ப்பணிப்புள்ள தனித்தந்தையின் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அவரது புத்திசாலித்தனமான மகள் தாரா (இனாயத் வர்மா) உடன் கடந்து செல்வதைப் பற்றிய ஒரு நெகிழ்ச்சியான கதை. 'பி ஹேப்பி' படத்தில் நோரா ஃபதேஹி, நசர், ஜாணி லெவர் மற்றும் ஹர்லீன் செட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். இது மார்ச் 14 அன்று பிரைம் வீடியோவில் வெளியானது.

அடுத்து அக்ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக், பர்ர்தீன் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நர்கிஸ் ஃபக்ரி, சஞ்சய் தத், ஜாக்கி ஷ்ராஃப், சங்கி பாண்டே, ஜானி லெவர் மற்றும் ஸ்ரேயாஸ் தலபடே ஆகியோருடன் 'ஹவுஸ்ஃபுல் 5' படத்தில் அபிஷேக் நடிக்க உள்ளார். தருண் மன்சுகானி இயக்கிய இந்த காமெடி படத்தில் டைனோ மோரியா, சித்ராங்கதா சிங், ரஞ்சித், சவுண்டர்யா ஷர்மா மற்றும் நிக்கிதின் தீர் ஆகியோரும் நடிக்கின்றனர். 'ஹவுஸ்ஃபுல் 5' இந்த ஆண்டு ஜூன் 6 அன்று வெளியாக உள்ளது.

ஐஸ்வர்யா ராயின் திரைப்படங்கள்

ஐஸ்வர்யா ராய் கடைசியாக இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்: 2 படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படம் குறித்த திட்டத்தை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.