Vadivaasal Update: நீண்ட நாள் கழித்து கிடைத்த அப்டேட்! வாடிவாசல் படத்தில் இணைந்த ஐஸ்வர்ய லட்சுமி! சூர்யாவுக்கு ஜோடியா?
வாடிவாசல் குறித்தான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சூர்யாவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி அதன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த இயக்குனர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் இயக்குனர் வெற்றி மாறன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலைப் இரண்டாம் பாகம் படம் தமிழ்நாடு மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் விடுதலை பாகம் ஒன்றை விட இரண்டிற்கு அதிக வரவேற்பு இருந்தது. வெற்றிமாறனின் அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல்
இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளாக வெற்றிமாறன் இயக்கி வருவதாக கூறப்படும் வாடிவாசல் படம் குறித்தான எந்த அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. நடிகர் சூர்யா இறுதியாக எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் கங்குவா என்ற படத்தை கொடுத்திருந்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைந்துள்ளதாக பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகி இருந்தது. படத்தின் படப்பிடிப்பு தொடராமல் தள்ளிப் போகி வந்தது.
தற்போது வாடிவாசல் குறித்தான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சூர்யாவின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா லட்சுமி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தால் சிறப்பான படமாக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வரை வெளியாகவில்லை.