Aishwarya Bhaskaran: 52 வயசு கிழவிடா நான்; ஆபாச மெசெஜ்கள் அனுப்பியவர்களை தோலுரித்த சவுண்ட் சரோஜா!
தனக்கு ஆபாச மெசெஜ்கள்அனுப்பியவர்களை எச்சரித்து நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி. இவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன். நியாயங்கள் ஜெயிக்கட்டும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுக்குட்டி படம் மூலம் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். குறிப்பாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு படத்தில் இவர் ஏற்று நடித்த சவுண்டு சரோஜா கதாபாத்திரம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது.
ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க வறுமையின் பிடியில் சிக்கினார். இந்த நிலையில் அவர் தற்போது சோப்புகள் மற்றும் தோல்சாதன பொருட்களை ஆன்லைன் மூலம் விற்று வருகிறார். இந்த நிலையில் அவரது மொபைல் போனுக்கு சிலர் ஆபாச மெசெஜ்கள் அனுப்பியதாக கூறி அவர் வீடியோ ஒன்றை தன்னுடைய யூடியூப் சேனல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ நாங்கள் எப்போதிலிருந்து சோப்பு தொடர்பான ஆர்டர்களுக்கு போன் நம்பர்களை பொது வெளியில் கொடுக்க ஆரம்பித்தோமோ.. அப்போதிலிருந்து இது போன்ற தொந்தரவுகள் வருகின்றன.
இரவு 11 மணி , 12 மணிக்கெல்லாம் போன் கால்கள் வருகின்றன. இங்கு கிளாமராக யாரும் இல்லை. நான் 52 வயது கிழவி. நாங்கள் விற்றுக்கொண்டிருப்பது சோப்பு மற்றும் தோல்சாதன பொருட்களைத்தான். இங்கு யாரும் தங்களை விற்கவில்லை. மொத்தம் மூன்று ஆண்கள் என்னை தினமும் தொந்தரவு செய்கிறார்கள். அதில் ஒருவர் அவரை ஆபாசமாக படமெடுத்து அனுப்பி இருக்கிறார். அதில் பார்த்தால் இந்த வயதில் வாந்திதான் வரும்.
எனக்கு அன்றைய தினம் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. ஒருவர் சோப்பு விற்பது தொடர்பாக பர்சனலாக பார்க்க வேண்டும் என்று மெசஜ் அனுப்பி இருக்கிறார். சோப்பு விற்பதில் என்ன பர்சனல் இருக்கிறது. வீட்டில் நாய்கள் வைத்திருக்கிறேன். கடிக்க விட்டு விடுவேன். நான் எல்லாரையும் சொல்லவில்லை. சில ஆண்கள் மட்டும்தான் இப்படி இருக்கிறார்கள். கணவனை இழந்து ஒரு பெண் தனியாக வாழ்ந்து வந்தால் அவள் எப்படி வேண்டுமென்றாலும் இருப்பார் என்ற நினைப்பு” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
டாபிக்ஸ்