தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Aishwariyaa Bhaskaran Latest Interview About Her Relationship With Actor Prabhu

Actress Aishwariyaa: ‘பிரபுவுக்கு சின்ன வீடா கூட.. புனிதா அக்காவுக்கே அது தெரியும்…’ - ஐஸ்வர்யா ஓப்பன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 18, 2024 05:30 AM IST

அங்கிருந்து இப்போது வரை எனக்கு பிரபு சார் என்றால் மிகவும் இஷ்டம். நான் பிரபுவின் வெறித்தனமான ரசிகை என்பது அவருடைய மனைவியான புனிதா அக்காவிற்கு நன்றாகத் தெரியும்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “நான் பிரபு சாரின் மிகப் பெரிய ரசிகை. என்னுடைய 16 வயதில் இருந்து நான் காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான். அன்றும் இன்றும் என்றும் என நான் சாகும் வரை நான் அவரின் ரசிகையாகவே இருப்பேன். 

நான் என்னுடைய 16 வது வயதில் பாலைவன ரோஜா திரைப்படத்தை பார்த்தேன். அந்தப் படத்தில்தான் பிரபுசாரை முதன் முறையாக பார்த்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன்.

அங்கிருந்து இப்போது வரை எனக்கு பிரபு சார் என்றால் மிகவும் இஷ்டம். நான் பிரபுவின் வெறித்தனமான ரசிகை என்பது அவருடைய மனைவியான புனிதா அக்காவிற்கு நன்றாகத் தெரியும். 

நாங்கள் இணைந்து ‘ஆம்பள’ திரைப்படத்தில் நடித்தோம். அப்போது அவரிடம் விளையாட்டாக என்னை பெரிய வீடாகவோ, அல்லது சின்ன வீடாகவோ என எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கை முழுவதும் உங்களை நான் மறைந்திருந்து பார்த்தால் மட்டும் போதும் என்று சொன்னேன். 

புனிதா அக்காவும் மாமா என்றால் ஐஸ்வர்யாவுக்கு பைத்தியம் என்று சொல்வார். என்னால் அவரைத் தாண்டி வேறு ஒருவரை அந்த இடத்தில் வைத்து பார்க்கவே முடியாது. அந்தளவு அவரை நான் காதலிக்கிறேன். 

சுயம்வரம் திரைப்படத்தில் முதலில் கமிட் ஆனது வேறு ஒரு நடிகை. ஆனால் அதில் கழிப்பறை தொடர்பான காட்சிகள் இருந்த காரணத்தால் அவர் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சென்று விட்டார். இந்த நிலையில்தான் பி. வாசு அந்தப்படத்தில் என்னை கமிட் செய்தார். எனக்கு முதலில் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க தயக்கமாகவே இருந்தது. ஆனால் வாசு என்னை சமாதானம் செய்து அந்தப்படத்தில் நடிக்க வைத்தார்” என்று பேசினார்.

முன்னதாக, ஐஸ்வர்யாவின் வளர்ப்பு தந்தையான மோகன் அவரின் அம்மா லட்சுமியை பற்றி பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அவர் பேசும் போது, “திரைத்துறையில் நானும் ஒரு பிரபலம், லட்சுமியும் ஒரு பிரபலம். இரண்டு பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு அதனை கடைசி வரை கொண்டு செல்வது என்பது மிக மிக கடினமான ஒன்று.

என்னுடைய வாழ்க்கையில் எங்களுக்கு இடையான கணவன் மனைவி உறவு பத்து வருடங்கள் நீடித்தது. அதன் பின்னர் எங்களால் ஒன்றாக இணைந்து இருக்க முடியவில்லை. இதனையடுத்துதான் நாங்கள் பிரிந்தோம். ஆனால் கடந்த பேட்டியில் நான் பர்சனலாக சில விஷயங்களை மிகவும் ஓப்பனாக பேசி விட்டேன். உண்மையில் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. நான் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யார் மீது தவறு என்பதை விசாரணை கமிஷன் வைத்தெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.

கடந்த பேட்டியில் சொன்னது எல்லாமே உண்மைதான். உண்மை என்று நிரூபிக்க என்னிடம் இப்போது எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது நான் அதை எப்படி நிரூபிப்பேன். நான் சொன்னது அனைத்துமே உண்மைதான். அதில் எனக்கு இப்போதும் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் கிடையாது. அவர் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். நான் ஒத்துக் கொண்டேன். அது ஏன் அந்த சமயத்தில் நடந்தது என்று இப்போது என்னால் சொல்ல முடியாது. நான் அன்று என்னுடைய உள் உணர்வை கேட்டு அந்த முடிவை எடுத்தேன்.

நாங்கள் வாழ்ந்த பத்து வருடங்களில் எங்களுடைய உறவானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டே வந்தது. ஐஸ்வர்யா என்னிடம் வந்து லட்சுமி அம்மா பிற ஆண்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னபோது, அதனை நீங்கள் தீர விசாரித்தீர்களா என்று கேட்கிறீர்கள். ஆனால் நாங்கள் அப்பொழுதே பிரிந்து விட்டோம்.

ஒரே வீட்டிலேயே வெவ்வேறு அறைகளில் வசித்துக் கொண்டிருந்தோம். அப்படி இருந்த போது அதற்கு மேல் அதனை விசாரிப்பது என்பது தேவையில்லாத விஷயம். இதனையடுத்து தான் நான் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.

ஒரு குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை உங்களுடைய ரத்தமாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் வேறு ஒரு தொடர்பில் இருப்பது என்பது அந்த குழந்தைக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்னுடைய வாழ்க்கையில் அந்த பத்து வருடங்கள் தேவையில்லாத ஒன்றாக மாறி விட்டது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையில் அது மிகவும் மோசமான பகுதி என்றே கூறுவேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்