தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress, Actress Anjali Devi, Anjali Devi, Lady Superstar

HBD Anjali Devi: அந்த கால லேடி சூப்பர் ஸ்டார் அஞ்சலிதேவி நினைவு நாள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 13, 2024 05:00 AM IST

1927 ஆகஸ்ட் 24 அன்று பிறந்து தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி அவர்கள் மறைந்த இந்த நாளில் அவரின் சாதனைகளை நினைவு கூர்வோம்.

நடிகை அஞ்சலி தேவி பிறந்த நாள்
நடிகை அஞ்சலி தேவி பிறந்த நாள்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை மாகாணத்தில் இருந்த பெத்தபுரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்தார். அஞ்சனம்மாள் என்று பெயர் சூட்டப்பட்டது. தனது சிறு வயதிலேயே நடன நாடக கலைஞர் ஆக கலை வாழ்க்கையை ஆரம்பித்தார் தனது 9 வயதில் ஹரிச்சந்திரா எனும் தெலுங்கு மொழி வரலாற்று படத்தில் அறிமுகமாணார். சிறு வயதிலேயே முற்போக்கு சிந்தனையும் உதவும் தன்மை உடையவர். தனது பதினாறு வயதில் இரண்டாவது உலகப்போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நடண நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினார். 1947 ல் கொல்லபாமா என்ற தெலுங்கு மற்றும் தமிழ் டப் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் புல்லையா அவர்களால் அஞ்சலி தேவி என்ற பெயரில் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.

தமிழில் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களுடன் நாயகியாக நடித்த ஆதித்தன் கனவு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவர் லவகுசா என்ற முதல் மல்டி கலர் திரைப்படத்தில் என்.டி.ராமாராவுடன் சீதா தேவியாக நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்று இரு மொழிகளிலும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. ஜனாதிபதியிடமிருந்து தங்க பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற லவகுசா காரணமாக அமைந்தது. பின்னர் இரண்டு மொழிகளிலும் உள்ள பிரதான நடிகர்களின் ஜோடியாக பல்வேறு மாறுபட்ட வேடங்களில் நடித்தார்.
பக்தி படங்களில் மட்டும் அல்லாமல் சில படங்களில் கிளாமராகவும் முரண்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்தவர். அவர் நாயகி யாக நடித்த காலகட்டத்தில் கனவு கன்னியாக திகழ்ந்தார். கறுப்பு வெள்ளை நிற படங்களில் இருந்தே அசைக்க முடியாத முக்கிய நாயகியாக இருந்தவர். தெலுங்கு, தமிழ்,கன்னடம் ஆகிய மொழிகளில் 350 க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். இசை அமைப்பாளர் ஆதிநாராயணன் ராவை 1940 ல் கரம் பிடித்து இல்லறவாழ்க்கை தொடங்கினார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடனம், நாடகம், சினிமா என்று பயணித்தவர் அவரது கணவருடன் சேர்ந்து தனது பெயரிலேயே படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். சிவாஜி கணேசன் அவர்கள் முதன் முதலில் இவரது தயாரிப்பில் தான் நடித்தார். ஆனால் பராசக்தி முந்திக்கொண்டது. அதேபோல் பாலிவுட் நடிகை ரேகாவை 'ரங்குலா ரத்னம்' என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகம் செய்தவர். அஞ்சலி பிக்சர்ஸ் மூலம் சுவர்ண சுந்தரி, அனார்கலி,பரதேசி உள்ளிட்ட இருபதுக்கும் மேலான படங்களை தயாரித்தவர்.வயதான பிறகு அக்கா,சித்தி,அம்மா கதாபாத்திரங்களில் நடித்தார். தனது நடிப்பு க்காக நான்கு முறை பிலிம்பேர் விருது உட்பட பல விருது கள் பெற்றவர். அவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்த போதிலும் தனது இளமைக்காலத்திலேயே சென்னைக்கு குடியேறியவர் கடைசி வரை சென்னையிலேயே இருந்து விட்டார்.

1940ல் திருமணம் நடந்த பின்பும் திரைப்பட உலகில் முன்னனி நட்சத்திரமாக ஜொலித்தவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவர் பதவி வகித்த முதல் பெண்... பக்தி படங்களில் நடித்து தெய்வமாக மக்களால் போற்றப்படும் அவரே துணிவோடு கவர்ச்சியிலும் கலக்கியவர். இதய பிரச்சினை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு 2014 , ஜனவரி 13 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.