Actress Abirami: ‘என் உயரத்த வச்சு கிண்டல் பண்ணி… தாடை இழுத்து இழுத்து.. கல்கிதான் எல்லாமே’ - அபிராமி!
நீங்கள் குழந்தையை வளர்த்துப் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து இருக்கும். முதல் இரண்டு வருடங்களுக்கு அந்த குழந்தைக்கு சரியான விதத்தில் தான் நினைப்பதை சொல்லத் தெரியாது - அபிராமி!
பிரபல நடிகையான அபிராமி பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தை அவருடைய வாழ்க்கையில் வந்த பின்னர் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்தும், குழந்தைக்கும் கணவர் ராகுலுக்கு இடையே இருக்கும் உறவு குறித்தும், வாவ் லைஃப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “அப்பா பெண் உறவை அடித்துக் கொள்ளவே முடியாது.அவர்களுக்கு இடையில் அப்படியான ஒரு கனெக்சன் இருக்கிறது. அவர் குழந்தையை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்.
நீங்கள் குழந்தையை வளர்த்துப் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து இருக்கும். முதல் இரண்டு வருடங்களுக்கு அந்த குழந்தைக்கு சரியான விதத்தில் தான் நினைப்பதை சொல்லத் தெரியாது. ஒன்று சிரிக்கத் தெரியும் அல்லது அழ தெரியும். அதை நாம் பார்த்து, தற்போது குழந்தைக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
சில சமயங்களில் நாம் குழந்தைக்கு பால் கொடுப்போம். தொளில் தூக்கிப் போட்டு உலாத்துவோம். ஆனால், என்ன செய்தாலும் குழந்தை அழுவதை நிறுத்தாது. ஆனால் நாம் பொறுமையாக இருந்து, குழந்தையை சமாதானப்படுத்த வேண்டும்.
நாங்கள் கல்கியை வீட்டுக்கு அழைத்து வந்த முதல் இரண்டு வாரங்களில், அவள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தாள். அப்போது ராகுல் என்னிடம், உனக்கு ஒரு கட்டத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டு வரலாம். இந்தக் கோபம் உன்னிடம் இருந்து குழந்தைக்கு கடக்கும் முன்னர் என்னை கூப்பிட்டு விடு. நானும் அந்த மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்ளும் பொழுது, உன்னை கூப்பிட்டு விடுகிறேன். இதில் நாம் ஒருவருக்கொருவர் அவமானப்பட்டு கொள்ள தேவையில்லை என்றார்.
நீங்கள் தற்போது புதியதாக குழந்தை பெற்றிருந்தால்,அந்த குழந்தைக்காக இரவில் அதிக நேரம் விழித்திருக்க வேண்டி இருக்கும். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டி இருக்கும். கூடவே மன அழுத்தமும் வாட்டும். அது உண்மையில் உடலளவில் கடுமையான போராட்டம் தான்.” என்று பேசினார்.
மேலும் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து பேசிய அபிராமி, “என்னை என்னுடைய உயரம் வைத்து கிண்டல் அடித்திருக்கிறார்கள். அதே போல என்னுடைய தாடை கொஞ்சம் நீளமாக இருக்கும். அதை வைத்தும் கிண்டல் அடித்திருக்கிறார்கள் அதை இழுத்து,இழுத்து பார்த்து இருக்கிறார்கள்.
என்னுடைய உயரத்தால் எனக்கு திரைப்படங்களில் வரக்கூடிய பல வாய்ப்புகள் மிஸ் ஆகி சென்று இருக்கின்றன. இயற்கை மிகவும் இரக்க குணம் கொண்டது. எனக்கு சடாரென்று கண்ணீர் வந்துவிடும்.
ரியல் லைஃப்பில் எனக்கு பெரிதாக நடிக்கத் தெரியாது. எனக்கு அது மிகவும் கஷ்டம் தரக்கூடிய விஷயமாகவும் இருந்திருக்கிறது. அதன் காரணமாக இந்த திரைத்துறையில் நான் சிலவித கசப்பான சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்