Actress Abhirami: “எடை கூடி.. மன அழுத்தத்துல சிக்கி.. செத்துருவேனோன்னு பயந்தேன்” - அபிராமி வேதனை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Abhirami: “எடை கூடி.. மன அழுத்தத்துல சிக்கி.. செத்துருவேனோன்னு பயந்தேன்” - அபிராமி வேதனை!

Actress Abhirami: “எடை கூடி.. மன அழுத்தத்துல சிக்கி.. செத்துருவேனோன்னு பயந்தேன்” - அபிராமி வேதனை!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 18, 2024 09:02 AM IST

Actress Abhirami: அந்த நேரத்தில் உடல்ரீதியான பல்வேறு காரணங்களால், என்னுடைய எடை கூடி இருந்தது. அதை என்னால் அப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடியாது. நான் அப்போது அதை இரண்டு விதமாக பிரித்தேன் - அபிராமி வேதனை!

Actress Abhirami:  “எடை கூடி.. மன அழுத்தத்துல சிக்கி.. செத்துருவேனோன்னு பயந்தேன்” - அபிராமி வேதனை!
Actress Abhirami: “எடை கூடி.. மன அழுத்தத்துல சிக்கி.. செத்துருவேனோன்னு பயந்தேன்” - அபிராமி வேதனை!

என்ன இப்படி குண்டாயிட்டேன்னு கேட்டு கஷ்டப்படுத்துவாங்க 

அதில் அவர் பேசும் போது, “மீடியாவில் இருந்து மட்டுமல்ல, வெளியில் இருந்தும், எனக்கும் பாடி ஷேமிங் (உடல் ரீதியான கேலிகள்) நடந்திருக்கிறது. நான் ஆரம்பம் முதலே கொஞ்சம் உயரமாக இருப்பேன். அதனாலேயே, நான் பலவகையான பாடி ஷேமிங்கிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறேன். இடையே, எடை கூடி குண்டாகி இருந்தேன். அதை பார்க்கும் சிலர், என்ன இப்படி குண்டாகிவிட்டாய் என்று சர்வ சாதரணமாக கேட்பார்கள்.

ஆனால், அது எதனால் நடந்து இருக்கிறது. நாம் ஏதாவது மருத்துவ ரீதியான பிரச்சினைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோமோ இல்லை, மனஅழுத்தத்தில் இருக்கிறோமோ என்பது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு உதாரணம்தான்.. இதை தவிர்த்து என்ன கருத்துவிட்டாய்... முடியெல்லாம் கொட்டி விட்டதே.. முடியெல்லாம் வெள்ளையாகிவிட்டதே.. என்று கேட்டும் வார்த்தைகளால் சங்கடப்படுத்துவார்கள். 

உடல்ரீதியான பல்வேறு காரணங்களால் என்னுடைய எடை கூடி இருந்தது.

இது எல்லோருக்கும் நடக்கக்கூடியததுதான். நான் எடை கூடி இருந்த போது, என்னுடைய போட்டோவை பார்க்கும் போது, எனக்கே ஒரு மாதிரிதான் இருக்கும். காரணம், அந்த நேரத்தில் உடல்ரீதியான பல்வேறு காரணங்களால், என்னுடைய எடை கூடி இருந்தது. அதை என்னால் அப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடியாது. 

நான் அப்போது அதை இரண்டு விதமாக பிரித்தேன். நான் ஹெல்தியாக இருக்கிறேனா? இல்லை ஹெல்தியாக இல்லையா? என்பதாக அது இருந்தது. இப்போது நான் உடல்ரீதியாகவும், எமோஷனலாகவும் ஹெல்தியாக இருக்கிறேனா? இல்லையா என்பதில்தான் என்னுடைய போக்கஸ் இருந்தது. இன்றைக்கும் நான் என்னுடைய எடை மெஷின் எண்கள் அதிகரிப்பதை பற்றி கவலைப்படுவதில்லை.
 

எனக்கு ஹிப்னோ தெரபிதான் மிகவும் உதவிகரமாக இருந்தது.

மனரீதியான பரிசோதனை சார்ந்த முடிவுகளின் எண்களும், உடல்ரீதியான பரிசோதனை சார்ந்த முடிவுகளின் எண்களும்தான் எனக்கு முக்கியம். பிறவற்றை நான் கண்டுகொள்வதில்லை. எனக்கு உண்மையில் மனபதற்றம் நிறைய இருந்தது. அந்த சமயத்தில் எனக்கு ஹிப்னோ தெரபிதான் மிகவும் உதவிகரமாக இருந்தது. இதையும், மருந்துகளையும் வைத்துதான் நான் அதனை கையாண்டேன். அந்த நேரத்தில் நான் செத்து விடுவேனோ என்று நினைத்திருக்கிறேன். என்னை சுற்றி அப்படி ஒரு பயம் சூழ்ந்து இருக்கும். இதயம் படபடக்கும். மூச்சு வாங்கும். 

அந்த சமயத்தில் நாம் நம் மூச்சின் மீது கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால்,  நாம் கேட்கும் ஒலி மீது, பார்க்கும் பொருளின் மீது, தொடும் பொருளின் மீது கவனம் செலுத்த வேண்டும். இது உண்மையிலேயே எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதைத்தவிர்த்தும் பிற விஷயங்கள் இருக்கின்றன. ஆகையால் மனநல பிரச்சினைகளுக்காக மருத்துவ உதவி எடுத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: