தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actors Vijay-ajith Director Ezhil Next Movie Vimal Starrer Desinguraja 2

DesinguRaja 2: விஜய் டைரக்டர்; வித்யாசாகர் இசை.. விமலின் மாஸ் கூட்டணி.. மறுபடியும் வருகிறான் தேசிங்கு ராஜா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 12, 2024 04:11 PM IST

முதல் பாகத்தில் நடித்த விமலே இந்த பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்

மீண்டும் இணையும் கூட்டணி!
மீண்டும் இணையும் கூட்டணி!

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திகேயன் நடித்த  “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் இயக்கியவர் இயக்குநர் எழில். 

இவரது இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில், கடந்த 2013 ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. மக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த விமலே இந்த பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 

இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த  பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். 

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் s.எழில்.  

இந்தப் படத்தில் விமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

 “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு இந்தப்படத்தில் மீண்டும் வித்யாசாகருடன்  இதில் இணைகிறார் எழில். 

படபிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.