Thug Life: 'தக் லைஃப்' படத்தில் இணைந்த மலையாள நடிகா்..அப்டேட் கொடுத்த படக்குழு!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு தொடங்க இருக்கிறது.
1987 ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' படத்துக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணையும் படம் 'தக் லைஃப்' (Thug Life). கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
கமல்ஹாசனின் 234 ஆவது படமான இதில், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக் உள்பட பலா் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
கேங்ஸ்டா் கதையில் உருவாகும் இந்தப் படத்தின் புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 18-ம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிது
'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு தொடங்க இருக்கிறது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், 'தக் லைப்'படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கோலிவுட் நடிகா் கௌதம் கார்த்திக் ஆகியோா் இணைந்துள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் அதிகாரப்பூர்வாக இன்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடிகர் நாசர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோா் இணைந்துள்ளனா். ஜோஜு ஜார்ஜ் தமிழில் ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, பஃபூன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறாா்.
இதனிடையே, இயக்குநா் ஷங்கரின் இந்தியன்-2 படத்தில் கமல் நடித்துள்ளாா். காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாா். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியது. அதில், கமல்ஹாசன் கை கட்டிக்கொண்டு ஸ்டைலாக நிற்க, அவரை சுற்றி லைட்டிங் டீம் டெக்னீஷியன்கள் இருந்தனா்.
டாபிக்ஸ்