Yogi Babu: விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபுவின் கார்.. அதிகாலையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!
Yogi Babu: நடிகர் யோகி பாபுவின் கார் அதிகாலையில் விபத்தில் சிக்கியது.

Yogi Babu: நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர், யோகி பாபு. இவரது காமெடிகளில் தனித்துவம் கலந்த சென்னை ஸ்லாங் இருக்கும். யதார்த்தம் இருக்கும். ஆரம்பத்தில் லொள்ளு சபா என்னும் தொலைக்காட்சித்தொடரில் துணை நடிகராக நடித்து, ஸ்கிரிப்ட் ஒர்க், சினிமாவில் சிறு சிறு ரோல் எனப் படிப்படியாக நடித்து, இப்போது காமெடி நடிகர்களில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து இருப்பவர், நடிகர் யோகி பாபு.
இந்நிலையில் இவர் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த யோகி பாபு பயணித்த கார், சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
காயம் இன்றி தப்பிய யோகி பாபு:
இதில் நல்வாய்ப்பாக காயம் இல்லாமல் உயிர் தப்பினார், நடிகர் யோகி பாபு. பின் சிறிது நேரத்தில் வேறு ஒரு கார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார், யோகி பாபு. இந்த விபத்து காரணமாக வாலாஜாபேட்டை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நடிகர் யோகி பாபு, மண்டேலா, பொம்மை நாயகி, லவ் டுடே ஆகியப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் தனது நடிப்பால் ஈர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடக்க இருந்த பெரும் விபத்தில் இருந்து நடிகர் யோகி பாபு தப்பியது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
யோகி பாபுவை சுற்றும் வினை:
சமீப காலமாக நடிகர் யோகி பாபு தான் ஒதுங்கிசென்றாலும், வினை பட்டபாடில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் யோகி பாபு, மூன்று பேர் சேர்ந்துகொண்டு பேசும் ஒரு யூட்யூப் சேனலில் படத்தினை பற்றி நல்லவிதமாக பேச பணம் கேட்பதாகப் புகார் சொன்னார். இதனால் கொதித்துப்போன வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோர் தங்களைத் தான் யோகி பாபு சாடுகிறார் என நினைத்து அவர் நடிப்பதற்குத் தகுதியில்லாதவர் என கடுமையாக விமர்சித்தனர். அதன்பின் நடிகர் யோகி பாபு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் முருகனின் படத்தைப் போட்டு, அவர் பார்த்துக்கொள்வார் என சொல்லாமல் பதிலடி கொடுத்தார்.
அதேபோல் சூட்டிங்கிற்கு சரிவர யோகி பாபு வருவதில்லை என்றும், பணத்தைப் பெற்றுக்கொண்டு நடிக்க வரமாட்டேன் என்கிறார் என எழுந்த விமர்சனங்களுக்கும் நடிகர் யோகி பாபு பதிலுரைத்தார்.
இதனை லக்கிமேன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திய யோகி பாபு, ‘சூட்டிங் வராமல் நான் என்ன குளத்துவேலைக்காகவா போனேன். சரியாக, கொடுத்த டேட்டுக்கு நான் சூட்டுக்குத் தயாரா இருக்கேன். நீங்க ஃபைனான்ஸ் மத்த பிரச்னையோட இருந்துட்டு, என்னைப் பத்தி ஈஸியா தப்பா சொல்லிடலாம். நான் கதை கேட்டுப் படம் பண்றது கிடையாது.
கஷ்டத்தைக் கேட்டு தான் படம் பண்றேன். இதனால் நிறைய இளம் இயக்குநர்கள் உருவாகியிருக்காங்க. இதை எப்பவுமே பண்ணுவேன். மற்றவங்க சொல்றதை, சொல்லிட்டுப் போங்க’ என்றார்.
மேலும் படிக்க: அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த யோகி பாபு
மேலும் படிக்க: யோகி பாபு பெற்ற விருது
மேலும் படிக்க: பள்ளி வாழ்க்கையை படமாக்க ஆசைப்பட்ட யோகி பாபு

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்