Thalapathy 69: தளபதி 69 கதையை முடிச்சுவிட்ட விடிவி கணேஷ்.. வம்படியாய் மைக்கை பிடுங்கிய டைரக்டர்..
Thalapathy 69: நடிகர் விஜய்- இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகிவரும் படம் தெலுங்கு படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மீண்டும் கிளப்பி உள்ளார் நடிகர் விடிவி கணேஷ்.

Thalapathy 69: தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களே இயக்கி இருப்பினும், அதில் தன் கதை மற்றும் இயக்கத்தால் வெற்றி கண்டவர் இயக்குநர் ஹெச். வினோத். தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமா மொத்தத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரான ஹெச். வினோத் தற்போது நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கான வேலைகளில் முழு வீச்சில்இறங்கியுள்ளார்.
தளபதி 69 பூஜை
நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் பூஜைகள் முடிந்து, படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரவுவதால், ஒருவேளை தளபதி 69 படத்தில் விஜய் போலீசாகத்தான் நடிக்க உள்ளாரோ என பலரும் சந்தேகத்தில் உள்ளனர்.
தளபதி 69 நடிகர்கள்
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரேமலு புகழ் நடிகை மமிதா பைஜூ ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படமே விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி 69 விஜய்யின் கதாப்பாத்திரம் என்ன?
சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்ல இருப்பதால், நடிகர் விஜய்யின் இந்தப் படம் நிச்சயம் அரசியலை மையப்படுத்தியே நகரும் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாகவே நடிக்க உள்ளார் எனக் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியையும், வலிமை படத்தில் அஜித்தையும் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்து மிரட்டி இருப்பதால், ஹெச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தில் அவரை போலீஸ் அதிகாரியாகவே நடிக்க வைப்பார் என கருத்து தெரிவித்துவருகின்றனர்.
விடிவி கணேஷின் சர்ச்சை கருத்து
இந்நிலையில், தெலுங்கு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடிவி கணேஷ், நான் இதை இங்கு சொல்லியே ஆக வேண்டும். இது அவ்வளவு முக்கியமானது. நடிகர் விஜய் அனில் ரவிபுடியின் பகவந்த் கேசரி படத்தை 5 முறை பார்த்தார். அந்தப் படத்தால் அவர் ஈர்க்கப்பட்டு அனில் ரவிபுடியிடம் பேசினார். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் இந்தப் படத்தை எனது 69வது படமாக தமிழில் ரீமேக் செய்து இயக்க முடியுமா எனக் கேட்டார். ஆனால் அனில் ரவிபுடி அதனை மறுத்துவிட்டார் எனக் கூறினார்.
குறுக்கிட்ட அனில் ரவிபுடி
விடிவி கணேஷ் தொடர்ந்து இதுபற்றி கருத்து தெரிவிக்க, சுதாரித்துக் கொண்ட இயக்குநர் அனில் ரவிபுடி, என் கதை வேறு, இப்போது விஜய் நடிக்கும் படம் வேறு. தளபதி 69 படத்தின் கதை பற்றி இன்னும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதனால் இங்கு அதைப்பற்றி பேசவேண்டாம்.
நான் பார்த்த நடிகர்களில் மிகவும் கனிவானவர் விஜய். அவரைப் போல் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் நடிகர்களை நான் பார்த்தது இல்லை. நான் அவரை வாரிசு பட ஷூட்டிங் சமயத்தில் பார்த்திருக்கிறேன். அவரை வைத்து படம் எடுக்க எனக்கு காலம் கூடி வரவில்லை. எனப் பேசி, விடிவி கணேஷ் கையில் இருந்து மைக்கை பிடிங்கிக் கொண்டார்.
தெலுங்கு படத்தின் ரீமேக்கா?
ஏற்கனவே, விஜய் எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்? படத்தின் கதை என்ன? படத்தில் நடிக்க உள்ள அத்தனை நடிகர்களும் எப்படி பயன்படுத்தப்பட உள்ளனர்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்த நிலையில், சில நாட்களாகவே தளபதி 69 படத்தை சுற்றி ஒரு வதந்திபரவிவருகிறது.
அரசியலில் களமிறங்க உள்ள விஜய் தன் ரசிகர்களைக் கவர கடைசிப் படத்தை மிகவும் பார்த்து பார்த்து எடுக்க வேண்டும் என நினைத்த நிலையில், அவர் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
பகவந்த் கேசரி ரீமேக்
தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் பாலைய்யாவின் பகவந்த் கேசரி படத்தின் கதை தான் தளபதி 69 என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது படக்குழுவினரிடமிருந்தே வந்த தகவல் என்றும், இதற்காக தளபதி 69 தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டாபிக்ஸ்