Vishal: சரக்கு வாங்க நின்ற இளைஞர்கள் - தட்டிக்கேட்டு புரட்சி செய்த விஷால் - எங்கு?
டாஸ்மாக் கடையன்று மது வாங்க நின்ற இளைஞர்களை நடிகர் விஷால் அடித்து விரட்டுவதுபோன்ற வீடியோ வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஷால் நடித்த ‘ரத்னம்’ படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சில வெளியாகி, சமூகத்தின் அவலத்தை தோலுரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஹிந்தியிலும் இந்தத்திரைப்படம் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் ’ரத்னம்’ என்னும் படத்தில் நடித்து வந்தார். இது நடிகர் விஷாலின் 34ஆவது படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
'ரத்னம்' திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். தவிர, சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியப்பணிகளை இயக்குநர் ஹரி செய்ய, இசையினை தேவிஸ்ரீ பிரசாத் மேற்கொண்டிருந்தார். படத்துக்கான ஒளிப்பதிவை எம். சுகுமாரும், தயாரிப்பினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் கார்த்திகேயன் சந்தானமும், ஜி ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றில் நீண்ட வரிசையில் நிற்கும் கூட்டத்தை, நடிகர் விஷால் அடித்து விரட்டுவதைப் போன்ற காட்சி ஒன்றை அவரின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ, இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ’ரத்னம்’ படத்தில் இடம்பெற்றகாட்சி என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் இக்காட்சி இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அப்போது பலரும் சமூகத்தில் நடக்கும் அவலத்தை தோலுரிப்பதுபோல் இருப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஷால் திருட்டு விசிடிக்களை விற்ற நபர்களை, அவர்களது கடைகளுக்கே சென்று பிடித்து, காவல் துறையில் புகார் அளித்தார். அதுபோலவே, இந்த காட்சியும் இருப்பதால் இது ரீலா அல்லது ரியலா என வீடியோவை ஆரம்பத்தில் பார்க்கும்போது ஒரு குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இருப்பினும், அங்கிருக்கும் காட்சிகள் நடிப்பு என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்