Actor Vishal: ‘பொறுக்கி பய அவன்..’ முச்சந்திக்கு வந்த துப்பறிவாளன் பிரச்சினை.. ‘மிஷ்கினுக்கு நன்றி சொன்ன விஷால்’!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vishal: ‘பொறுக்கி பய அவன்..’ முச்சந்திக்கு வந்த துப்பறிவாளன் பிரச்சினை.. ‘மிஷ்கினுக்கு நன்றி சொன்ன விஷால்’!

Actor Vishal: ‘பொறுக்கி பய அவன்..’ முச்சந்திக்கு வந்த துப்பறிவாளன் பிரச்சினை.. ‘மிஷ்கினுக்கு நன்றி சொன்ன விஷால்’!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 17, 2024 01:02 PM IST

இந்த நேரத்தில் எனது தந்தைக்கு நன்றி கூறி கொள்கிறேன். அதே போல் எனது குரு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். டைரக்டராக உங்கள் பேரை காப்பாத்துவேன்.

நடிகர் விஷால்!
நடிகர் விஷால்!

இது குறித்து விஷால் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில் “ஹீரோவாக என்னுடைய பயணம் 25 வருடங்களுக்கு பிறகு இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது. என்னுடைய கனவு, ஆசை, வாழக்கையில் நான் என்னவாக இருக்கப்போகிறேன் என்கிற என்னுடைய முதல் எண்ணம் எல்லாமே நிஜமாகி இருக்கிறது. ஆம்.., எனது திரையுலக பயணத்தில் ஒரு அறிமுக இயக்குநராக அதிக சவாலான புதிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

அந்தவகையில் தற்போது நான் முதன்முதலாக இயக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்திற்காக லண்டன், அசர்பைஜான் மற்றும் மால்டாஆகிய இடங்களுக்கு கிளம்புகிறோம்.

விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் என் தந்தை ஜி.கே ரெட்டி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் சார் சொன்னதுபோல கடுமையான உழைப்பு ஒருபோதும் வீணாகாது. எதுவந்தாலும் பரவயில்லை என உங்கள் கனவுகளை விடாமுயற்சியுடன் தொடரும்போது ஒருநாள் அது நிஜமாக மாறும்.

இந்த நேரத்தில் எனது தந்தைக்கு நன்றி கூறி கொள்கிறேன். அதே போல் எனது குரு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். டைரக்டராக உங்கள் பேரை காப்பாத்துவேன்.

ஒரு நடிகர் என்கிற இந்த அடையாளத்தை தந்த அனைவருக்கும் நன்றி. துப்பறிவாளன் - 2 வுக்கும் ஒரு இயக்குநராகவும் உங்களது ஆதரவு தொடரும் என நம்புகிறேன்.

எனது கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலைப்டாதீர்கள்.. நிஜ வாழவிலோ அல்லது சினிமா வாழக்கையிலோ நான் யாருடைய குழந்தையையும் ஒருபோதும் கைவிடமாட்டேன். அதேபோல் உங்கள் குழந்தையான துப்பறிவாளன்2 வை தத்தடுத்த நான், அதை உங்கள் இலக்கை எட்டும் விதமாக செய்வேன் சார். கடவுளின் ஆசீர்வாதம்.. இப்போது வேலைக்கு கிளம்புகிறேன். நன்றி!” என்று அவர் பேசி இருக்கிறார்.

 

முன்னதாக, விஷால் நடிக்கும் துப்பறிவாளன்-2 படத்தை மிஷ்கின் இயக்கினார். படம் பாதி முடிந்த நிலையில் ரூ.5 கோடி சம்பளம் உள்பட பல்வேறு நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கூறி சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து கைகலப்பு வரை சென்றது. 

இதனையடுத்து மிஷ்கினை அந்தப்படத்தில் இருந்து நீக்கினார் விஷால். இந்த ஆதங்கத்தை இயக்குநர் மிஷ்கின் மேடை ஒன்றில் வெளிப்படுத்தினார். அந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், அதற்கு பேட்டி ஒன்றில் பதில் அளித்த விஷால், மிஷ்கின் எனக்கு செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன். அவருடன் இணையவே மாட்டேன்” என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த மிஷ்கின், “ என் இதயத்துக்கு நெருக்கமான விஷாலிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டோம். 

நான் விஷாலை ரொம்ப ‘மிஸ்’ செய்கிறேன். இதை சொல்வதால் விஷாலுக்கு ஐஸ் வைக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். விஷாலை வைத்து சத்தியமாக இனி படம் இயக்கவே மாட்டேன்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.