Vishal: சின்னப்படங்கள் பற்றி பேசினால் வில்லனாக பார்த்தாங்க.. ரொம்ப மோஷமான நிலையில் தமிழ் சினிமா இருக்கு.. விஷால் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal: சின்னப்படங்கள் பற்றி பேசினால் வில்லனாக பார்த்தாங்க.. ரொம்ப மோஷமான நிலையில் தமிழ் சினிமா இருக்கு.. விஷால் பேச்சு

Vishal: சின்னப்படங்கள் பற்றி பேசினால் வில்லனாக பார்த்தாங்க.. ரொம்ப மோஷமான நிலையில் தமிழ் சினிமா இருக்கு.. விஷால் பேச்சு

Marimuthu M HT Tamil
Jan 30, 2025 11:15 AM IST

Vishal: சின்னப்படங்கள் பற்றி பேசினால் வில்லனாக பார்த்தாங்க.. ரொம்ப மோஷமான நிலையில் தமிழ் சினிமா இருக்கு என நடிகர் விஷால் பேசியிருக்கிறார்.

Vishal: சின்னப்படங்கள் பற்றி பேசினால் வில்லனாக பார்த்தாங்க.. ரொம்ப மோஷமான நிலையில் தமிழ் சினிமா இருக்கு.. விஷால் பேச்சு
Vishal: சின்னப்படங்கள் பற்றி பேசினால் வில்லனாக பார்த்தாங்க.. ரொம்ப மோஷமான நிலையில் தமிழ் சினிமா இருக்கு.. விஷால் பேச்சு

சுந்தர் சி - விஷால் கூட்டணியில் உருவாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் பொங்கலை ஒட்டி ரிலீஸான திரைப்படம், மத கஜ ராஜா. வழக்கமான சுந்தர் சியின் காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடுபோட்டது. படம் வெளியாகி 18 நாட்களுக்குப் பின், 52.45 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால் சென்னையிலுள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், ‘’சைக்கிள் ஓட்டுறது நல்ல விஷயம் தானே. டிராபிக்கில் எல்லாம் புகுந்து சாமி பார்க்கிறதுக்கு போனேன். இப்போதும் சாமி பார்க்கப்போனேன். கபாலீசுவரர் கோயிலுக்கு நான் ஒரு வாக்குறுதி கொடுத்து இருந்தேன்.

அதற்கேற்றார்போல் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடியிருக்கு. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பிச்சுட்டேன். அதை நான் கடவுளிடம் சொல்ல வந்தேன். குறிப்பாக சிவபெருமானிடமும் முருகப்பெருமானிடமும் சொல்ல வந்தேன்.

எனக்கு அபூர்வமான விஷயம் கோலவிழியம்மன் கோயிலில் நடந்தது. நான் எதிர்பார்க்கல. 12 வருஷங்கள் கழித்து ஒரு படம் வந்து இவ்வளவு வெற்றிபெறும் என்று. அதனால் சாமிக்கு நன்றி சொல்லிட்டுப்போகலாம்னு தான் வந்தேன்.

ஒரு கோடி ரூபாய் இருந்தால் வங்கியில் போடுங்க: விஷால்

நான் சின்ன பட்ஜெட் படங்கள் பற்றிப்பேசும்போது, என்னை வில்லனாகப் பார்த்தாங்க. நான் திரும்பவும் சொல்றேன். ஒரு கோடியில் இருந்து நான்கு கோடி வரை படம் எடுக்கணும் என்று இருந்தால், இந்த வருஷமும் அடுத்த வருஷமும் வங்கியில் வைப்புத்தொகையாகப் போடுங்க. இல்லையென்றால், நிலத்தை வாங்குங்கள். ரொம்ப மோஷமான நிலையில் இருக்கு தமிழ்த்திரைத்துறை.

நான் ஓபனாக சொல்கிறேன். மத்தவங்க, சொல்லமாட்டாங்க. நல்ல பாதையில் கொண்டு போகும் நபர்களை நம்பி படமெடுக்கலாம். காசு இருக்கிறவங்க எல்லோரும் படம் எடுக்கலாம். ஏன் விஜய் மல்லையா, அம்பானி எல்லாம் படம் எடுக்கலாமே. ஏன் எடுக்க மாட்டியுறாங்க என்றால், அவங்களுக்குப் புரியுது. ஏனென்றால், சினிமா இன்டஸ்ட்ரி என்பது உறுதியாகப் பலன் கிடைக்கும், உறுதியாக லாபம் கிடைக்கும் என்று எல்லாம் இல்லை. முக்கியமாக சின்னப் படங்களுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஓடிடியாகட்டும், சேட்டிலைட்டாகட்டும் சின்னப்படங்களுக்கு விற்கிறது கேள்விக்குறியாக இருக்குன்னு நான் உணர்ந்து சொன்னேன்.

சில படங்கள் நன்றாக இருந்தும் ரிலீஸ் ஆகவில்லை: விஷால்!

போனவாரம் 6 படங்கள் ரிலீஸ் ஆச்சு. அதில் சில படங்கள் நன்றாகவே இருந்தது. ஆனால், ஆடியன்ஸ் தியேட்டருக்கு வரல. அதற்கு நாம் ஆடியன்ஸை தவறு சொல்லமுடியாது.

அவங்க சம்பாதிச்ச பணத்தில் ஒரு பங்கினை பொழுதுபோக்கிற்கு செலவழிக்கணும்னு வர்றாங்க. அந்த வகையில் உண்மையிலேயே சொல்றேன், சினிமாத்துறை மோசமான நிலையில் தான் இருக்கு. அதைச் சரிசெய்யணும் என்றால், புரொடியூசர் கவுன்சில் கண்டிப்பாக சில ஸ்டெப்ஸ் எடுக்கணும்.

அதை அவங்க எடுத்தால் சின்னப்படங்களுக்கு உணர்வு கொடுக்கும். உற்சாகம் கொடுக்கும் சின்னப் படங்களுக்கு. சின்னப்படங்கள் தான் வந்து ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வாய்ப்பு தருகிறது. நாங்கள் எல்லாம் வருஷத்துக்கு மூன்று படம் இல்லையென்றால் இரண்டு படம் தான் நடிக்கிறோம். சின்னப் படங்களை நம்பி 18ஆயிரம்பேர் நம்பி இருக்காங்க’’ என்றார், நடிகர் விஷால்.

அதைத்தொடர்ந்து அப்போது பத்மபூஷண் விருதுவென்ற அஜித் சாருக்கு பாராட்டு விழா வைப்பீங்களா? என செய்தியாளர்கள் கேட்டனர். 

அதற்கு பதிலளித்த விஷால், ’’அஜித் சாருக்கு வாழ்த்துகள். அஜித் சார் விழா வைத்தால் வரணும். ஆனால், அஜித் சார் வரமாட்டார். எனவே, அஜித் சாருக்கு மனதார நடிகர் சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிச்சுக்கிறேன்’’ என்றார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.