Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து

Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து

Marimuthu M HT Tamil
Jan 31, 2025 02:14 PM IST

Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து

Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து
Vishal:சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமா இருக்கு.. பெண்கள் தற்காப்புக் கலை கற்கணும்.. விஷால் கருத்து

இதுதொடர்பாக சென்னையில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று தரிசனம்செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், ‘’ விஜய் ஆண்டனி பராசக்தி என்கிற டைட்டிலை, தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் பதிவுசெய்திட்டார். அதேமாதிரி சிவகாரத்திகேயன் நடித்த டீசர் தெலுங்கிலேயும் பராசக்தின்னு ரிலீஸ் செய்திட்டாங்க. எனக்குத்தெரிந்து இந்த விஷயம் நாசர் சாருக்குத் தெரியும்னு நினைக்கிறேன். இதை சமரசமாகப் பேசித்தீர்க்கணும்.

பூகம்பத்தை விட, விஷால் கை ஆட்டுனது தான், உலகம் முழுக்க என்னை எத்தனை பேர் நேசிக்கிறாங்கன்னு எத்தனை பேர் பிரார்த்தனை பண்றாங்கன்னு எனக்கு புரியவைச்சுச்சு. நம்ம சூப்பர் சூப்புராயன் மாஸ்டர் எனக்காக வேண்டிக்கிட்டார். அவரைப் போய் பார்க்கப் போறேன். ரொம்ப நன்றி. 4 நிமிஷத்தில் உலத்துக்கே காட்டிடீங்க என்னை எத்தனை பேர் நேசிக்குறாங்கன்னு. அதனால் எந்த பேட்டியாக இருந்தாலும் என் கைகளை ஆட்டிட்டுத் தான் பேசுவேன்.

மத கஜ ராஜாவுக்குப் பின் மீண்டும் சுந்தர் சி கூட இணையப் போவது குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் தகவல் வரும்.

மற்ற நடிகர், நடிகைகள் பற்றி தரக்குறைவாகப் பேசுவது அநாகரிகமான விஷயம்: விஷால்!

நீங்க என்ன வேண்டுமென்றாலும் எழுதுங்க. என்னோட ஆரோக்கியம் பற்றி உச்ச கட்ட கற்பனையில் ஒரு டாக்டர் பேசினார். அவர் டாக்டரா இல்லை கம்பவுண்டரான்னு கூட எனக்குத் தெரியாது. விஷாலுக்கு நரம்பு தளர்ச்சி, மூன்று மாசம் எழுந்திருக்கமாட்டான் அப்படின்னு கற்பனை பண்ணுனாங்க. அதேபோல், மற்ற நடிகர், நடிகைகள் பற்றி தரக்குறைவாகப் பேசுவது அநாகரிகமான விஷயம். ஏனென்றால் உங்கள் வீட்டிலும் பெண்மணிகள் இருக்காங்க. அதனால் பொறுப்புணர்ந்து பேசுங்க. வியூஸ்க்காக இப்படி பேசினால் பார்த்திட்டு இருக்கமுடியாது. அதனால் தான் கேஸ் ஃபைல் பண்ணவேண்டியதாகப் போச்சு.

பேச்சுரிமை இருக்கு என்பதற்காக, படத்தைப் பற்றி விமர்சிக்கலாம். ஆனால், ஒருத்தவங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. முதலில் கண்ணாடியைப் பார்த்திட்டு அவங்களுக்கு நாம் பேசினால் எப்படி பாதிக்கப்படுவாங்கன்னு யோசிச்சிட்டு பேசுங்க. பேசலாம். அடுத்தவங்க காயப்படுறமாதிரி பேசக்கூடாது. ரொம்ப கொச்சைப்படுத்தி பேசுறதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் ஒருத்தங்க இன்னொருத்தவங்களைக் காயப்படுத்தாமல் பேசக் கத்துக்கணும்.

பெண்கள் தற்காப்புக் கலை கற்றுக்கொள்ள வேண்டும்: விஷால்!

சென்னையில் பாதுகாப்பு இல்லைன்னு சொல்றது இருக்கட்டும், பெண்கள் பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்குப் போய் படிக்கிறப்போ, தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ளுங்க.

சில பொறுக்கிகளுக்கு கடவுளே வந்து சொன்னாலும் கேட்கமாட்டாங்க. பெண்களை வந்து விலைபோகும் பொருள் போல் போதையில் ஏதோ சொல்றாங்க.

இப்போது எல்லாம் காவல் துறை மதுகுடித்துவிட்டு ஓட்டுவதைத் தீவிரமாகக் கண்காணிக்கணும். பெண்கள் அதேமாதிரி ஆண்கள் மாதிரி இருக்கணும். பெண்கள் தற்காப்புக் கலை கற்றுக்கொள்ள வேண்டும்.

சினிமாவையும் சூதாட்டத்தையும் ஒரே வகையில் பிரிச்சி ஜி.எஸ்.டி போட்டிருக்காங்க. அதனால்,மத்திய பட்ஜெட்டில், சினிமாவுக்கு இந்த வகைப்படுத்தலில் இருந்து வெளியே வந்து வரியைக் குறைத்தால் நன்றாக இருக்கும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இரண்டு வரி கட்டுறாங்க. அதை மோடி ஐயாவுக்கும், அண்ணாமலை அவருக்கும் கொடுத்திருந்தோம். இந்தியா முழுக்க ஒரு டேக்ஸ் கட்டினால் போதும் என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு வரிகள் கட்டுகிறோம். சினிமாவும் சூதாட்டமும் ஒரே பிரிவில் இருப்பது வருத்தமாக இருக்கு. தமிழ் சினிமாவுக்கு ஏதாவது அறிவிப்புகள் விட்டார்கள் என்றால் மத்திய நிதியமைச்சரை நேரில் பார்த்து நன்றி தெரிவிப்போம்’’ எனக் கூறினார், நடிகர் விஷால்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.