Vishal Salary: இது எல்லாம் நியாயமா சார்.. ‘ரத்னம்’ படத்திற்காக ரூ.1 கோடி சம்பளத்தை உயர்த்திய விஷால்?
Vishal Salary: ‘ரத்னம்’ படத்திற்காக விஷால் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆக்ஷன் ஹீரோ விஷால், மாஸ் டைரக்டர் ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'ரத்னம்'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ரத்னம்'. இந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம். ரத்னம் திரைப்படம் தெலுங்கில் ஸ்ரீ சிரி சாய் சினிமாஸ் பேனரின் கீழ் சிஎச் சதீஷ் குமார் மற்றும் கே ராஜ் குமார் இணைந்து வெளியிடுகின்றனர்.
ஹரி இயக்கத்தில் விஷால் இணைவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே ரத்னம் படத்திற்கு முன்பாக தாமிரபரணி (2007) மற்றும் பூஜை (2014) படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்து ஈருக்கிறார்.
பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சென்சார் பணிகளும் நிறைவடைந்துள்ளது. அந்தளவிற்கு சென்சார் உறுப்பினர்கள் படத்தைப் பார்த்து யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
ஆக்ஷனுடன் நல்ல செய்தியும் உள்ள இந்தப் படம் குடும்பப் படம் எனப் பாராட்டப்படுகிறது. சமீபத்தில் வெளியான எதுவாய்போ எதுவாய்போ.. என்ற பாடல் கேட்போரை கவர்ந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் விஷால் கூட்டணியின் முதல் படம் ரத்னம் என்பதால் இசை ஆர்வலர்களின் கவனம் ரத்னம் மீது விழுகிறது.
ரத்னம் விமர்சனம்
1994 ஆம் ஆண்டில் திருப்பதி மலையில் மூன்று கொள்ளையர்கள் ஒரு பேருந்தைத் தாக்குவதிலிருந்து படத்தின் கதை தொடங்குகிறது. இந்த தாக்குதலில் 26 பேர் மரிக்கின்றனர்.
மேலும் குற்றத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். பின்னர், கதை ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பின், வேலூருக்கு செல்கிறது. அங்கு ஒரு அநாதையான 12 வயது சிறுவன் ஒருவன், ஒரு கொலைத்தாக்குதலுக்கு ஆளாக இருந்த, பன்னீர்செல்வனை (சமுத்திரக்கனி) காப்பாற்றுகின்றான்.
அந்த சிறுவன் தான், ரத்னம்(விஷால்). வளர்ந்தபின், பன்னீர்செல்வனின் வலதுகரமாக மாறுகிறார். பன்னீர் செல்வம், ரவுடியாக இருந்து எம்.எல்.ஏ மாறிவிடுகிறார்.
வேலூரில் குண்டர்களாக இருக்கும் ரத்னத்தையும் அவரது ஆட்களையும் ஏழைகளுக்கு உதவவும், நீதி தேவைப்படுபவர்களுக்கும் உதவவும் மட்டுமே பன்னீர்செல்வன் பயன்படுத்துகிறார். சுருக்கமாக சொன்னால், ரத்னம் மற்றும் அவரது சகாக்கள் பணத்திற்காக கொலை செய்வதில்லை, ஒருவரை கொலை செய்வதற்குக் கூட அவர்களுக்கு கொள்கைகளும் காரணங்களும் உள்ளன. இதை ரத்னமே ஒரு காட்சியில் சொல்கிறார்.
நன்மைக்காக ரவுடித்தனம் செய்யும் ‘ரத்னம்’ தனது பணியைச் செய்யும்போது, அவரது பாதை திடீரென நீட் தேர்வு எழுத திருத்தணியில் இருந்து வரும் நர்ஸ் மல்லிகாவை (பிரியா பவானி சங்கர்) பார்க்கிறார்.
அப்போது ரத்னம், இறந்துபோன, தனது அம்மாவை ஒத்திருக்கும் மல்லிகாவைப் பார்த்து கலக்கமடைகிறார். திடீரென ராயடு (முரளி ஷர்மா) தலைமையில் ஒரு ஆந்திரக் கும்பல், அவளைக் கொல்ல வருகிறது. ரத்னம் மீண்டும் மீட்பராக இருக்கிறார். இந்த கும்பல் ஏன் அவளை கொல்ல விரும்புகிறார்? அந்தப்பெண் யார்? ரத்னத்தின் அம்மாவுக்கும் மல்லிகாவுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் கதை.
இந்நிலையில், ‘ரத்னம்’ படத்திற்காக விஷால் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரூ.1 கோடி உயர்த்திய அவர், கடைசியில் 5.4 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்