‘தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன்.. இனிமேல் நிம்மதியாக தூங்குவேன்’ - மேடையில் எமோஷனலான விஷால்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன்.. இனிமேல் நிம்மதியாக தூங்குவேன்’ - மேடையில் எமோஷனலான விஷால்!

‘தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன்.. இனிமேல் நிம்மதியாக தூங்குவேன்’ - மேடையில் எமோஷனலான விஷால்!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 19, 2025 11:06 PM IST

விஷாலின் பிறந்த நாளில்தான் கல்யாணத்திற்கு திட்டமிட்டு இருக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகளை விஷால் செய்து கொண்டிருக்கிறார் - தன்ஷிகா பேச்சு!

‘தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன்.. இனிமேல் நிம்மதியாக தூங்குவேன்’  - மேடையில் எமோஷனலான விஷால்!
‘தன்ஷிகாவை முழுமையாக காதலிக்கிறேன்.. இனிமேல் நிம்மதியாக தூங்குவேன்’ - மேடையில் எமோஷனலான விஷால்!

இந்த அறிவிப்பு குறித்து விஷால் பேசும் போது, ‘உங்கள் எல்லோரையும் பார்ப்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; இங்கு தன்ஷிகாவின் அப்பா வந்திருக்கிறார். அவருடைய அனுமதியோடு நான் இதனை அறிவிக்கிறேன்; நாம் இப்போது யோகிடா படத்தின் நிகழ்வில் இருக்கிறோம்.

அந்த நிகழ்வில் என்னுடைய பர்சனல் சம்பந்தமான விஷயங்களை பேசக்கூடாதுதான். இருப்பினும் இங்கு என்னுடைய ஒத்த ஆன்மாவான தன்ஷிகா இருக்கிறார். இதற்கு மேல் நாங்கள் மூடி மறைக்க விரும்பவில்லை. உங்களை என் குடும்பமாக உணர்ந்து இந்த இடத்தில் இந்த விஷயத்தை சொல்கிறேன்; ஆமாம், நான் தன்சிகாவை தான் முழுமையாக காதலிக்கிறேன். ஆமாம், நான் தன்சிகாவை தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்; நீங்கள் எல்லோரும் எங்களது கல்யாணத்திற்கு வர வேண்டும் எங்களை வாழ்த்த வேண்டும்.

நடிகர் நடிகையாக நிச்சயமாக உங்களை நாங்கள் மீண்டும் சந்திப்போம். ஆனால், ஒரு தம்பதிகளாக என்னுடைய குடும்பமான உங்கள் எல்லோரையும் அந்த இடத்தில் நான் சந்திக்க வேண்டும். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு மேல் நான் அறிவிக்கவில்லை என்றால் தப்பாகிவிடும்.

தன்ஷிகா இதற்காக என்னை வீட்டில் சென்று அடித்தாலும் பரவாயில்லை; நான் தாங்கிக் கொள்கிறேன். ஆமாம் இந்த இடத்தில் நான் மிகவும் ஓப்பனாக சொல்கிறேன் நான் முழுமையாக தன்சிகாவை காதலிக்கிறேன். தன்சிகாவை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்று சொல்லும் போதே அவருடன் தன்ஷிகா இணைந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய தன்சிகா, ‘ விஷாலின் பிறந்த நாளில்தான் கல்யாணத்திற்கு திட்டமிட்டு இருக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகளை விஷால் செய்து கொண்டிருக்கிறார்.’ என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நான் இதனை உங்களிடம் ஷேர் செய்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம் அடைகிறேன். இனிமேல்தான் நான் சந்தோஷமாக தூங்குவேன் என்று நினைக்கிறேன். தயவு செய்து திருமண பத்திரிகை வராது என்று நினைக்காதீர்கள் நிச்சயமாக பத்திரிக்கை வரும்; இன்று நான் வாயால் உங்களுக்கு பத்திரிக்கை வைத்திருக்கிறேன்.’ என்று பேசினார்.