Vishal Vs Mysskin: 'மிஷ்கினுக்கு அருகதை இல்ல.. பேசிட்டு பேசிட்டு மன்னிப்பு'.. - விஷால்
Vishal Vs Mysskin: இயக்குநர் மிஷ்கின் அசிங்கமாக பேசிவிட்டு பின் மன்னிப்பு கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார் என நடிகர் விஷால் விமர்சித்துள்ளார்.

Vishal Vs Mysskin: இயக்குநர் மிஷ்கின் பாட்டல் ராதா படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் போது, வரம்பு மீறி சில அநாகரீகமாந வார்த்தைகளை பொது மேடையிலேயே பேசினார்.
இளையராஜா பற்றிய கருத்து
அத்துடன் இளையராஜாவின் இசை தான் என் போதைக்கு சைட் டிஷ். அவர் தான் பலரையும் குடிகாரன் ஆக்கினார் என்றும் பேசி இருந்தார். இதற்கு பல இடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. இதையடுத்து, அவர் பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மன்னிப்பும் கோரினார்.
இதே வேலையா போச்சு
இந்நிலையில், இயக்குநர் மிஷ்கினின் பேச்சுக்கு விஷால் கண்டனம் மற்றும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஷால் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மிஷ்கின் பேசிட்டு மன்னிப்பு கேட்டாரா? அதான். அவருக்கு இதுவே வேலையா போச்சு. நாம என்ன பண்ண முடியும்" என்றார்.
சுபாவத்த மாத்த முடியாது
தொடர்ந்து பேசிய விஷால், "மேடை நாகரீகம் என ஒன்று இருக்கு. அத தாண்டி கெட்ட வார்த்தை யூஸ் பண்ணா எப்படி. சில பேரோட சுபாவம் எல்லாம் மாத்த முடியாதது.
இளையராஜா சார அவன் இவன்ன்னு பேச யாருக்கும் அதிகாரமோ அருகதையோ கிடையாது. அந்த மனுஷன் கிட்டதட்ட கடவுளோட குழந்த.
வன்மையா கண்டிக்குறேன்
அவரோட பாட்ட கேட்டு நிறைய பேர் டிப்ரஷன்ல இருந்து வெளிய வந்திருக்காங்க. சந்தோஷம் அடைஞ்சிருக்காங்க. லாங் டிஸ்டன்ஸ் டிரைவ் போறாங்க. அவரு ஒவ்வொருவரோட ரத்தத்துலயும் இருக்காரு. இத்தன வருஷத்துல மணிரத்னம் சார் மாதிரி எத்தன டைரக்டர ஏத்தி விட்டுருக்காங்க. அவர போய் அவன் இவன்னு பேசுறது எல்லாம் நான் வன்மையா கண்டிக்குறேன்.
நாங்க குடும்பம்
நான் கிட்டதட்ட அவங்க குடும்பம் மாதிரி தான். யுவன், பவதாரணி, வாசுகி, கார்த்திக் ராஜா எல்லாம் என்னோட குடும்பம் மாதிரி. நான் அவங்களோட க்ளோஸ். அவர மரியாதை இல்லாம பேச யாருக்கும் ரைட்ஸ் இல்ல அத மட்டும் நான் நிச்சயம் சொல்லுவேன்" என்றார்.
விஷால்- மிஷ்கின் விவகாரம்
முன்னதாக விஷால், இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் 2ம் பாக அறிவிப்புகள் எல்லாம் வெளியான நிலையில், அவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது, மிஷ்கின் பட விழா ஒன்றில் விஷாலை ஒருமையில் பேசியதுடன், அவரை மிகவும் அநாகரீகமான வார்த்தைகளில் திட்டினார்.
விளக்கமளித்த மிஷ்கின்
இது மிகவும் வைரலான நிலையில், அவர், இது கூத்து கலைஞர் நிறைந்த இடம். நான் பேசிய வார்த்தைகளை அளந்து தான் பேசினேன். நான் பேசிய வார்த்தைகள் உணர்ச்சி மிகுதியில் வந்த எதார்த்த வார்த்தைகள் தான் என விளக்கம் அளித்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்