Actor Vishal: ‘மருத்துவர் கொடுத்த மருந்த விட நீங்கதான்; எப்போதுமே நான் உங்கள நம்புறேன் சார்; சீக்கிரமா’ - விஷால் எமோஷனல்
Actor Vishal: வாழ்க்கை பாதையில் என்ன வந்தாலும் நான் சந்தோஷமாக இருக்க, சந்தோஷமான வாழ்க்கையை நடத்த, என்னுடைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தையும் தாண்டி, நீங்கள் எனக்கு ஒரு மருந்தாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள். - விஷால் நெகிழ்ச்சி!

சுந்தர் சியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷால் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவர், ‘என்னுடைய நெருங்கிய சகோதரர், என்னுடைய ஃபேவரைட் இயக்குநர், என்னுடைய சிறந்த நண்பர், என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த நபர்களில் மிகவும் நல்ல மனிதரான சுந்தர் சி சாருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்.
வெற்றி கிடைக்க கடவுள்
உங்களுடைய பர்சனல் மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே உங்களுக்கு வெற்றி கிடைக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்; நடிகர் என்பதை தாண்டி உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து வாழ்த்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன். எனக்கு சூப்பர் ஹிட் படத்தை (மதகஜராஜா) கொடுத்ததிற்கு மிகவும் நன்றி. நான் எப்போதும் உங்களை நம்புகிறேன். பாசிட்டிவிட்டி வரும் இடத்தில் பாசிட்டிவான சூழ்நிலை உருவாகும்.
வாழ்க்கை பாதையில் என்ன வந்தாலும் நான் சந்தோஷமாக இருக்க, சந்தோஷமான வாழ்க்கையை நடத்த, என்னுடைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தையும் தாண்டி, நீங்கள் எனக்கு ஒரு மருந்தாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள்.
இந்த வருடம் மதகஜராஜா படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக்கொடுத்து கணக்கைத் தொடங்கி இருக்கிறீர்கள். இன்னும் நிறைய பிளாக் பஸ்டர் படங்கள் வரிசையில் வரும். மேஜிக் காம்போ மீண்டும் திரையில் இணையும் நேரத்தை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கட்டும்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
சுந்தர் சி- விஷால் கூட்டணியில் உருவாகி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டின் பொங்கல் ரிலீஸாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. காமெடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தின் கலெக்ஷன்
மதகஜராஜா திரைப்படம் வெளியாகி 9ம் நாளான நேற்று படம் 1.06 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக இதுவரை 42.6 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக சாக்னில்க் டாட் காம் இணையதளம் தெரிவித்துள்ளது.
படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்ட நிலையில், அதன் மூலமாக காலை, மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது.
அதுவும் விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதகஜராஜா படத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதனால், படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது.
போட்டி படங்களை காலி செய்த சுந்தர்.சி
தமிழ்நாட்டில் இந்தப்படத்திற்கு போட்டியாக வேறு எந்தப்படங்களும் சோபிக்க வில்லை; தெலுங்கில் கேம் சேஞ்சர் மற்றும் டாகு மகாராஜ் போன்ற திரைப்படங்கள் போட்டிப்படங்களாக இருந்த போதும் மதகஜராஜா படத்திற்கு அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முன்னதாக, மதகஜராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், கைநடுக்கத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அவரது உடல் கடுமையாக நலிவுற்றதாகவும், அவன் இவன் படத்தில் அவர் மாறுகண் வைத்து நடித்ததும், அதன் காரணமாக முளைத்த கெட்ட பழக்க வழக்கங்களுமே இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
விளக்கம்
என் உடல்நிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது. அப்படிலாம் ஒன்னும் இல்லை. எனக்கு கடுமையான காய்ச்சல் தான். அன்னைக்கு என்னால முடியல. ஆனாலும் இத்தனை வருஷம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கணும், அந்த ஃபங்கஷனை மிஸ் செய்ய கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன்" என்றார்.

டாபிக்ஸ்