Actor Vikranth: 106 கிலோ எடை.. மனைவி கேட்ட ஒற்றைக்கேள்வி.. அவமானத்தில் கூனி குறுகிய விக்ராந்த்!
மிகவும் மெத்தனப்போக்காக எந்த வித முன் தயாரிப்பும் இல்லாமல்தான் சினிமாவில் இறங்கினேன். ஆனால் களமிறங்கிய பின்னர்தான் சினிமா எவ்வளவு கஷ்டம் என்பது தெரிந்தது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். நடிகர் விஜயின் உறவினரான இவருக்கு சினிமாவில் அறிமுகம் ஈசியாக அமைந்து விட்டாலும், பயணம் என்னவோ பெரிய வெற்றியை நோக்கிச் செல்லவில்லை. அவரது கேரியரில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் பாண்டிய நாடு.
அதன் பின்னர் கவண், தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப்படம் வருகிற 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ரெட்நூல் சேனலுக்கு அவர் அண்மையில் பேசினார்.
அவர் பேசும் போது, “கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று சென்று கொண்டிருந்தேன். ஆனால், அதில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்துதான் சினிமாவிற்கு செல்லலாமென்று முடிவெடுத்தேன். விஜயின் சித்தி பையன் என்பதால் ஈசியாக வாய்ப்பு கிடைத்து விட்டது.
அப்போது எனக்கு 20 வயதுதான். அதற்கு முன்னதாக நான் பெரிதாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்குசென்றது கிடையாது. மிகவும் மெத்தனப்போக்காக எந்த வித முன் தயாரிப்பும் இல்லாமல்தான் சினிமாவில் இறங்கினேன். ஆனால் களமிறங்கிய பின்னர்தான் சினிமா எவ்வளவு கஷ்டம் என்பது தெரிந்தது.
எங்களைப் போன்று சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சினிமா என்ட்ரி ஈசியாகதான் இருக்கும். ஆனால் தொடர்ந்து நீடித்திருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சினிமாவில் என்னுடைய திறமையை வளர்த்துக்கொள்ளவே 10 வருடங்கள் ஆகி விட்டன.
நல்ல படங்களுக்காக முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில், என்னுடைய எடை கிட்டத்தட்ட 106 கிலோ இருந்தது. அப்போது ஒரு நாள் கண்ணாடி முன்நின்று என்னை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இதனை பார்த்த என்னுடைய மனைவி மானசா, உன்னை பார்... என்னிடம் பணம் இருந்தால் கூட, இப்படி இருக்கக்கூடிய நடிகரை வைத்து நானே படம் எடுக்கமாட்டேன்.. அப்படி இருக்கும் போது, நீ ஏன் வெளியே சென்று வாய்ப்புகளை தேடுகிறாய் என்று கேட்டாள். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்து விட்டது. அதன் பின்னர்தான் நான் என்னுடைய பாதையை மாற்றி முயற்சிகளை சரிவர செய்ய ஆரம்பித்தேன். பயணம் இப்போது இங்கு வந்திருக்கிறது” என்று பேசினார்.
டாபிக்ஸ்