‘முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க.. வீர தீர சூரன் பெரிய வெற்றி’: நடிகர் விக்ரம் உருக்கமான பேச்சு
வீர தீர சூரன் பட வெற்றி குறித்து நடிகர் விக்ரம் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

முதல் ஷோ கேன்சல் ஆனாலே அவ்வளவு தான்னு சொல்லிடுவாங்க என்றும், வீர தீர சூரன் பெரிய வெற்றியை நோக்கித்தான் போகுதுன்னு ரொம்ப உறுதியாக சொல்லமுடியுது என்றும் நடிகர் விக்ரம் உருக்கமாக நன்றி தெரிவித்து பேசியிருக்கிறார்.
வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், தயாரிப்புத்தரப்பினரின் சில பிரச்னைகளால், முதல் இரண்டு ஷோக்கள், கேன்சல் ஆனது. மாலையில் தான் படம் ரிலீஸானது. இந்நிலையில் படம் வெற்றியான நிலையைச் சென்று அடைந்துள்ளதாக, நடிகர் விக்ரம் தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக ஒரு வீடியோவை தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கும் நடிகர் விக்ரம், ’’ ஒரே ஒரு வாழ்க்கை ஈஸியா வாழ்ந்திருன்னு சொல்லிட்டுப் போயிட்டான். ஆனால், இந்த வாழ்க்கை இருக்கே அப்பா.. ஏதாவது பிரச்னை. ஏதாவது ஒன்று, பந்தை தூக்கி வீசிடுது நம் வாழ்க்கையில். அந்த மாதிரி நிறைய சந்திக்க வேண்டியிருக்கு இல்ல. உதாரணத்திற்கு வீர தீர சூரன் ரிலீஸுக்கு முன்பே அதைப் பார்த்து, அது ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஆகப்போகுதுன்னு, என்ன ஒரு படம் புதுசா இருக்கப்போகுதுன்னு சொன்னாங்க. அடுத்து ராவாக இருக்கு, மாஸாக இருக்குன்னு இந்த வருஷத்தோட பெரிய பிளாக் பஸ்டர்னு சொல்லி, எங்க எல்லோரையும் உற்சாகப்படுத்திட்டுப் போயிட்டாங்க.