Tamil News  /  Entertainment  /  Actor Vikram Karthik Subbaraj Mahaan 2 Coming

Mahaan 2: மீண்டும் வரும் காந்தி மகான்.. அதகள அப்டேட் கொடுத்த விக்ரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 11, 2024 02:00 PM IST

முதன் முறையாக அப்பாவுடன் இணைந்த துருவ் விக்ரமிற்கும் இந்தப்படம் திருப்பு முனையாக அமைந்தது.

மகான் 2
மகான் 2

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்தில் அப்பா - மகன் உறவிற்குள் இருக்கும் காந்தியம் சிந்தனை சார்ந்த சிக்கல்களை, ஆக்‌ஷன் அதகளமாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

இந்தப்படத்தின் வெற்றிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற  ‘நான் யார்’ பாடல் தற்போதும் சமூக வலைதளங்களில் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. 

முதன் முறையாக அப்பாவுடன் இணைந்த துருவ் விக்ரமிற்கும் இந்தப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்தப்படம் வெளியாகி நேற்றோடு 2 வருடங்கள் ஆன நிலையில், படக்குழு சார்பில் அது குறித்தான போஸ்டரும் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகினால் எப்படி இருக்கும் என்பதை குறிக்கும் வகையில், விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். புகைப்படங்களுடன் அவர் வெளியிட்டு இருக்கும் இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.