'லயன் இஸ் ஆல்வேஸ் லயன்'.. ஓடிடியிலும் ஆதிக்கம் செலுத்தும் கோட்.. இதுதான் நம்பர் 1..
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோர் கூட்டணியில் வெளியான கோட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேர் பார்த்த படமாக உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கோட்’. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத்திரைப்படம் உலகளவில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.
திரையரங்கில் 25 நாளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்தப்படம் கடந்த 3ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்த அறிவிப்பில், சிங்கம் எப்போதாவது கோட் ஆனதை பார்த்து இருக்கிறீர்களா? விஜயின் கோட் திரைப்படம், அக்டோபர் 3ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வருகிறது என்று குறிப்பிட்டு நெட்பிளிக்ஸ் அறிவிப்பை வெளியிட்டது.
முதல் இடத்தில் கோட்
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான சில நாட்களிலேயே, அதிகப் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட திரைப்படமாக கோட் மாறியுள்ளது. நெட்பிளிக்ஸின் டாப் 10 பட்டியலில் தி கோட் திரைப்படம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. தியேட்டர்களில் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், கோட் திரைப்படம் இப்போது ஓடிடியிலும் கலக்கி வருகிறது.