நாரதர் விஜய்.. கையில் பூவை சுற்றி கூலாக பாடிவரும் வீடியோ வைரல்.. அப்போ அரசியல் என்ட்ரி?
சினிமாவிலிருந்து விலகி அரசியலில் உறங்க உள்ள நடிகர் விஜய்யின் சிறு வயது வீடியோ வெளியாகியுள்ளது. நாரதர் வேடமிட்ட அவர், கையில் பூவைச் சுற்றி பாடிவரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் எஸ், ஏ. சந்திரசேகரின் மகனாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் விஜய். இவர், குழந்தை நட்சத்திரமாக சினிவால் அறிமுகமானர். பின் படிப்பில் கவனம் செலுத்துமாறு தாய் அறிவுறுத்தியன் பேரில் சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்தவர். பின் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சினிமாவில் நாயகனாகும் கனவில் உறுதியாக இருந்தார். அதன் பலன் இன்று தமிழக மக்கள் மட்டுமின்றி பலராலும் தளபதி என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.
குழந்தை நட்சத்திரம்
விஜய் முதன்முதலாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின் தொடர்ந்து, அவரது பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பின், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க தாய் சோபனா தயாரித்த நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆக்ஷன் ஹீரோ
இதையடுத்து, இளைஞர்களை கவரும் படங்களிலும், குடும்பப் பாங்கான படங்களிலும் நடித்து வந்த விஜய், பகவதி திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார். பின், திருமலை, கில்லி, ஆதி, போக்கிரி என ஆக்ஷன் ஹீரோவாக பட்டையை கிளப்பி வந்தார். பின், ஆக்ஷனுடன் இணைந்து பேமிலி சென்டிமெண்ட், காமெடி ஆகியவற்றையும் சேர்த்து தமிழ் மக்களின் ஃபேவரைட் ஹீரோவாக மட்டுமின்றி இளைய தளபதியாக இருந்தவர் தளபதியாகவும் மாறினார்.