Thalapathy Vijay: தலைவா நீ கைய மட்டும் காட்டு தலைவா.. ஷீட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சுத்து போட்ட ரசிகர்கள்..
Thalapathy Vijay: நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரசிகர்களை பார்த்து கை அசைத்த வீடியோ தற்போது அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay: நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இது விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அப்டேட்களுக்காகவும் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கின்றனர்.
வைரலாகும் விஜய்யின் புது கெட்அப்
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண படப்பிடிப்பு தளத்திற்கே சென்றுள்ளனர். அப்போது, தனது ரசிகர்களுக்கு உற்சாகமாக கை அசைத்தார் விஜய். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜன நாயகன் படத்திற்காக நியூ கெட் அப்பில் இருக்கும் விஜய்யை பார்த்த ரசிகர்கள் 'தலைவா', 'தலைவா' என கத்தி கூச்சலிட்டு தங்களது பாசத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
ஜன நாயகன்
நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ள நிலையில், அவரது கடைசி படமான தளபதி 69ல் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோலும் நடிக்கின்றனர்.
மேலும் இந்தப் படத்தில், பிரேமலு நடிகை மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடிக்க உள்ளதாக தளபதி 69 படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்தது.
ஜன நாயகன் ரிலீஸ் அப்டேட்
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகத நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் ஜன நாயகன் படம் குறித்து பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், " அடியும் ஒதயும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா ஜன நாயகன் பொங்கல் என ஹிண்ட் கொடுத்து, பின் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் உலகெங்கும் ஜன நாயகன் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.
கவனம் ஈர்த்த போஸ்டர்
விஜய்யின் கடைசி மற்றும் 69வது படத்தின் பெயர் 'ஜன நாயகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரே கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அவர் பொது இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது போன்றும் அவருக்கு பின் ஆயிரக் கணக்கானோர் நின்று கோஷமிட்டு குரல் எழுப்பது போன்றும், எம்ஜிஆர் ஸ்டைலில் சாட்டையை சுழற்றி அதில் நான் ஆணையிட்டால் என எழுதிய போஸ்டர்கள் வெளியானது. இந்த போஸ்டர்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
ஹெச். வினோத் விளக்கம்..
இதனால், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகத்தின் கதை அரசியலைத் தொடர்பு கொண்டு தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த சமயத்தில் ஜன நாயகன் படம் பற்றி பேசிய இயக்குநர் ஹெச். வினோத், விஜய் அரசியலுக்கு வந்ததால் இது அரசியல் சம்பந்தமான படமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஆனால், இது அரசியல் படமல்ல. இந்தப் படம் எடுக்கும் போதே, என்னுடைய படத்த எல்லா வயசுல இருக்கவங்களும் பாப்பாங்க, எல்லா அரசியல் கட்சிகளும் பார்ப்பாங்க. அதனால இது எல்லாருக்குமான படமா இருக்கணும்ன்னு சொன்னாரு.
200% தளபதி படம்
அதனால, இது அரசியல் கட்சியையோ அரசியல் தலைவரகளையோ தாக்கும் படமாக இருக்காது. இது சில சின்ன சின்ன விஷயங்களை வச்சி எடுத்த 100 சதவீத கமர்சியல் படமா தான் இருக்கும். இது 200 சதவீதம் தளபதி படமா இருக்கும். இது கமெர்சியலாக எல்லாரும் பார்க்கும் வகையிலான படமாக இருக்கும் என்றார்" என்றார்.
