Goat Box Office: காற்று வாங்கும் கோட்.. 17 நாள் முடிவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன சொல்கிறது பாருங்க
Goat Box Office: விஜய் நடித்த கோட் படம் 17 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 440 கோடி வசூலித்து உள்ளதாக பட தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Goat Box Office: இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய இயக்கத்தில் வெளியான திரைப்படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( தி கோட்). செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது மற்றும் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வியாபாரம் செய்துள்ளது. விஜய் நடித்த இப்படம் 17 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 440 கோடி வசூலித்து உள்ளதாக பட தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தி கோட் பட கதை
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti terrorist squad team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.
இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்சினை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சினை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதி கதை. மொத்தத்தில் கோட் திரைப்படம், நிறைய கேமியோ ரோல்களால் நிரம்பியிருக்கிறது என்றே சொல்லலாம்.