தமிழ் செய்திகள்  /  Entertainment  /   Actor Vijay Sethupathi Continues To Give Flop Films

‘போதும் போதும்… லிஸ்ட் பெருசா போகுது’ தயவு செய்து மீண்டு வாங்க விஜய் சேதுபதி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 06, 2022 11:08 AM IST

Vijaysethupathi Movies: ஏதோ, ஒன்று சறுக்கி, மற்றொன்று எழுந்தால் கூட பரவாயில்லை . சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் சறுக்கலில் தான் முடிந்திருக்கிறது.

விஜய் சேதுபதி - கோப்பு படம்
விஜய் சேதுபதி - கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

விஜய் சேதுபதி மாதிரியான எதார்த்த ஹீரோக்களை தான் அப்போதைய தலைமுறை எதிர்பார்த்திருந்தது. அதற்கு ஏற்றார் போல அவரும் கதைகளை தேர்வு செய்திருந்தார்.

பெரிய நடிப்புத் திறமை இல்லை என்றாலும், தான் ஏற்ற கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை விஜய் சேதுபதிக்கு இருந்தது. அதனால் தான், அவரை திரையில் பார்க்கும் போது, தன்னை திரையில் பார்ப்பதைப் போன்ற உணர்வை அவரது ரசிகர்கள் பெற்றனர்.

பெரிய நிறமில்லை, கட்டுக்கோப்பான உடல் இல்லை, நடனத்திலும் சுமார் ரகம், இப்படி எல்லா மைனஸ் இருந்தும், விஜய் சேதுபதியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது தமிழ் சினிமா. அதற்கு காரணம், அன்று அவரிடம் இருந்த கதை தேர்வு.

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி
விடுதலை படத்தில் விஜய் சேதுபதி

ஆனால், இன்று அந்த விசயத்தில் தான் கோட்டை விட்டு நிற்கிறார் விஜய் சேதுபதி. ஏதாவது ஒரு படத்தில் நடிப்பவர்களை பார்த்திருப்போம். எல்லா படத்திலும் நடக்கும் ஒருவராக விஜய் சேதுபதி மாறிக்கொண்டிருக்கிறார்.

ஏதோ, ஒன்று சறுக்கி, மற்றொன்று எழுந்தால் கூட பரவாயில்லை . சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் சறுக்கலில் தான் முடிந்திருக்கிறது.

லாபம்

ஜூங்கா

சங்கத்தமிழன்

துக்ளக் தர்பார்

றெக்கை

கருப்பன்

அனபெல் சேதுபதி

மாமனிதன்

19(1ஏ)

சிந்துபாத்

முகிழ்

டிஎஸ்பி

என, அவரது தோல்வி படங்களின் பட்டியல் நீண்டுகொண்டோ போகிறது. இடையில் வெற்றி பெற்ற விக்ரம் , மாஸ்டர் படங்களை எல்லாம் விஜய் சேதுபதி லிஸ்டில் சேர்க்க முடியுமா எனத் தெரியவில்லை. அதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இன்றும் விஜய் சேதுபதி மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. அவர் நல்ல படங்களை தருவார் என்கிற நம்பிக்தை இருக்கிறது.

அதனால் தான் அவரது படங்களுக்கு இன்னும் படையெடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் அவர். கை நிறைய படங்களை வைத்திருப்பது பெரிதல்ல; கை நிறைய வசூல் தரும் படங்களாக அவை இருக்க வேண்டும். மீண்டும் பழைய விஜய் சேதுபதி திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.