TheGoatSecondSingle: நாளை வெளியாகும் ‘தி கோட்’ செகண்ட் சிங்கிள்.. ட்ரெண்டிங்கில் விஜய்.. இணையத்தில் தொடர் எதிர்வினை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thegoatsecondsingle: நாளை வெளியாகும் ‘தி கோட்’ செகண்ட் சிங்கிள்.. ட்ரெண்டிங்கில் விஜய்.. இணையத்தில் தொடர் எதிர்வினை!

TheGoatSecondSingle: நாளை வெளியாகும் ‘தி கோட்’ செகண்ட் சிங்கிள்.. ட்ரெண்டிங்கில் விஜய்.. இணையத்தில் தொடர் எதிர்வினை!

Marimuthu M HT Tamil
Jun 21, 2024 05:04 PM IST

TheGoatSecondSingle: நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்தநாளை ஒட்டி, ’தி கோட்’ திரைப்படத்தில் இருந்து, இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகிறது. அதற்கு அவரது ரசிகர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக இணையத்தில் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

TheGoatSecondSingle: நாளை வெளியாகும் ‘தி கோட்’ செகண்ட் சிங்கிள்.. சின்ன சின்ன கண்கள் எனத் தொடங்கும் பாடலை பாடியவர் இவரா?
TheGoatSecondSingle: நாளை வெளியாகும் ‘தி கோட்’ செகண்ட் சிங்கிள்.. சின்ன சின்ன கண்கள் எனத் தொடங்கும் பாடலை பாடியவர் இவரா?

தி கோட் திரைப்படத்தில் நடிப்பவர்கள் விவரம்:

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.

தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி கோட் திரைப்படத்தின் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா?:

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி கோட் தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர்.

அதேபோல், விஜய் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதற்கும் தீனிபோடும் வகையில் திலீப் சுப்புராயன் மாஸ்டர், தி கோட் திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செகண்ட் சிங்கிள்:

இப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு அக்டோபர், 2023ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தினை 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். ‘தி கோட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், விசில் போடு, ஏப்ரல் 14 சித்திரை முதல் நாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் வெகுநாட்களாக, ‘தி கோட்’ படத்தின் அப்டேட்டை படக்குழு கேட்டுவந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ’சின்ன சின்ன கண்கள்’ பாடல், நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்த நாளான நாளை, மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையில் இப்பாடலை நடிகர் விஜயே பாடியிருப்பதாக, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜய்யும் அது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். 

ட்ரெண்டிங்கில் விஜய்.. இணையத்தில் தொடர் எதிர்வினை

அதில் ரசிகர் ஒருவர், கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உடல்நிலைப் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஒரு நாளுக்குள், உடனடியாக ‘தி கோட்’ படத்தின் புரோமோஷனுக்குச் சென்றதனை கலாய்த்துப் பதிவிட்டுள்ளார்.

 

மற்றொருவர் விஜய்யுடன் இருக்கும் நடிகை யார் என எக்ஸ் தளத்தில் வினவியுள்ளார்.

 

இது தொடர்பாக திமுக தொண்டர் பதிவிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘நேத்து சோகமா ஸீன் எல்லாம் போட்ட.. 24 மணி நேரம் கூட ஆகலேயே.. எல்லாமே புரமோஷனுக்கு தானா?’ என கிண்டலாகப் பதிவுசெய்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.