Sachein Movie release Update: விஜய் குரலில் வெளியான பாடல்.. ரீ- ரிலீஸில் சம்பவம் செய்யும் சச்சின் திரைப்படம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sachein Movie Release Update: விஜய் குரலில் வெளியான பாடல்.. ரீ- ரிலீஸில் சம்பவம் செய்யும் சச்சின் திரைப்படம்..

Sachein Movie release Update: விஜய் குரலில் வெளியான பாடல்.. ரீ- ரிலீஸில் சம்பவம் செய்யும் சச்சின் திரைப்படம்..

Malavica Natarajan HT Tamil
Published Mar 09, 2025 02:09 PM IST

Sachein Movie release Update: ரீ- ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட சச்சின் படத்தின் வாடி வாடி எனும் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

Sachein Movie release Update: விஜய் குரலில் வெளியான பாடல்.. ரீ- ரிலீஸில் சம்பவம் செய்யும் சச்சின் திரைப்படம்..
Sachein Movie release Update: விஜய் குரலில் வெளியான பாடல்.. ரீ- ரிலீஸில் சம்பவம் செய்யும் சச்சின் திரைப்படம்..

ரீ- ரிலீஸ் ஆகும் சச்சின் படம்

தமிழ் ரசிகர்களின் மனதில் எவர்கிரீன் படமாக அமைந்துள்ள இந்தப் படம் தற்போது ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார். சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி வரும் கோடையில் இப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

பாடல் ரிலீஸ்

இந்நிலையில், சச்சின் படத்தின் விஜய் பாடிய, வாடி வாடி கைப்படாத சீடி எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கலைப்புலி தாணு அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, சச்சின் படத்தின் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் குஷியாக உள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.

சச்சின் படம்

இந்தப் படத்தில் விஜயுடன், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் துள்ளல் நடனமாட வைக்கும் விதமாக அமைந்திருக்கும்.

எதிர்பார்த்த வசூலை பெறாத சச்சின்

சச்சின் படத்தின் ரிலீஸ் சமயத்தில், ரஜினியின் சந்திரமுகி படம் ரிலீஸ் ஆனது. இதனால், சச்சின் படத்தால் போதுமான வசூலை பெற முடியாமல் போனது. அத்தோடு அதே சமயத்தில் வெளியான கமல் ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் தோல்வியையே சந்தித்தது. இதனால், நல்ல இளைஞர்களைக் கவரும் வகையில் நல்ல கதையை கொண்டிருந்தாலும் சச்சின் படத்தால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

20 ஆண்டுக்கு பின் ரீ- ரிலீஸ்

இந்நிலையில் தான், சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அப்படத்தின் தயாரிப்பாளர் இந்த ரீ- ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே விஜய்யின் கில்லி படம் ரீ- ரிலீஸ் ஆகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனால், தற்போது சச்சின் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் நல்ல வரவேற்பை பெறும் என எண்ணி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

எப்போது ரிலீஸ்?

இதுகுறித்த அறிவிப்பில் கோடை வெளியீடு என மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரீ- ரிலீஸ் தேதி சரியாக அறிவிக்கப்படவில்லை. இதுவே படத்திந் மீதான அறிவிப்பை அதிகரிக்கிறது. மேலும் சச்சின் படத்தின் போஸ்டர்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வந்தது. இந்த சமயத்தில் பலரும் சச்சின் படம் இந்த மார்ச் மாதத்திலேயே வெளியாகும் என கூறி வருகின்றனர். ஆனால், படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.