Vijay Mother: ‘ஒரு அம்மாவா வாழ்த்துறேன்..’ ‘மகாநடிகை’ போட்டியாளருக்கு ஷோபா வாழ்த்து - காரணம் என்ன தெரியுமா?
Vijay Mother: விஜயின் அம்மாவிடம் இருந்து வந்த வாழ்த்து.. போட்டியாளருக்கு மகாநடிகை மேடையில் காத்திருந்த சர்ப்ரைஸ்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவும் தனித்துவமான வரவேற்பை பெற்று வருகின்றன.
5 போட்டியாளர்களுடன் இறுதி கட்டம்
அந்த வகையில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மகாநடிகை’ நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 5 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஞாயிறு அன்று இறுதிக்கட்டம்
வரும் ஞாயிறு அன்று நிகழ்ச்சியின் இறுதிகட்டமான கிராண்ட் ஃபைனல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வருகிறது.
முகத்தை சிதைத்த ஆசிட்
அந்த வகையில் 5 போட்டியாளர்களில் ஒருவரான ஹேமதி காதலை மறுக்க, அந்த நபர் ஆசிட் வீசி அவளது முகத்தை சிதைப்பது போன்ற காட்சியில் நடித்து நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பை பாராட்டி, நடிகர் விஜயின் தயார் ஷோபா சந்திரசேகர் உங்களை நான் பெரிய நடிகையாக பார்க்கணும்னு ஒரு அம்மாவாக வாழ்த்துறேன் என்று சொல்லி அவருக்கு சர்ப்ரைஸ் செய்துள்ளார்.
நடுவராக விஜய் ஆண்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ், சரிதா
ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற நடிகை சரிதா, இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் பிரபல நடிகையான அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்