GOAT ஸ்பாட்: மீண்டும் தோன்றிய விஜய் - தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat ஸ்பாட்: மீண்டும் தோன்றிய விஜய் - தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

GOAT ஸ்பாட்: மீண்டும் தோன்றிய விஜய் - தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Marimuthu M HT Tamil Published Jan 11, 2024 09:46 PM IST
Marimuthu M HT Tamil
Published Jan 11, 2024 09:46 PM IST

கோட் படப்பிடித்தளத்தின் முன் இருந்த ரசிகர்களை இரண்டாவது நாளாகப் பார்த்து நடிகர் விஜய் கையசைத்தார்.

கோட் படப்பிடித்தளத்தின் முன்பு மீண்டும் தோன்றிய விஜய்
கோட் படப்பிடித்தளத்தின் முன்பு மீண்டும் தோன்றிய விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார், விஜய். இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். வயதான மற்றும் இளமையான தோற்றம் என இருகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கோட் படத்தின் படப்பிடிப்பு, சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அவரைக் காண படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர்களின் கூட்டம் குவியத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று அங்கு படப்பிடிப்பினை முடித்துவிட்டு வந்த விஜய், தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆனது. அதில் மீசை இல்லாமல் பார்ப்பதற்கு இளமையாக காணப்பட்டார், விஜய்.

அப்போது, வாரிசு படத்தின் ரஞ்சிதம் பட ஸ்டைலில் முத்தங்களைப் பறக்க விட்டார், விஜய்.

முன்னதாக, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது இதேபோன்ற செல்ஃபி வீடியோவை எடுத்து அதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார், விஜய்.

இந்நிலையில் அதேபோன்று, நடிகர் விஜய் படப்பிடிப்பினை முடித்துவிட்டு இன்றும் தனது ரசிகர்களுக்கு இரண்டாவது நாளாக தரிசனம் தந்தார். இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகிவருகிறது.

வாரிசு பட இடைவெளியில் பாடலாசிரியர் விவேக் உள்பட படக்குழுவுடன் இணைந்து, விஜய் கிரிக்கெட் விளையாடியோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து கோட் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக வந்த விஜய்யை காண்பதற்கு கூடிய கூட்டத்தின் நடுவே, விஜய் நிற்கும் புகைப்படமும் இன்று அவரது ரசிகர்களை சந்தித்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.இதனால் கடந்த இரு நாள்களாக வைரல் மோடிலேயே இருந்து வருகிறார், விஜய்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் கோட் படம் உருவாகி வரும் நிலையில் , படம் ஜூன் மாதம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜயுடன் மீனாட்சி செளத்ரி, சிநேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்பட பலரும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.